Bangalore Crime News: பெங்களூருவில் அதிர்ச்சி! ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..! என்ன நடந்தது?
Sandapur Railway Bridge: பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபூர் ரயில்வே பாலம் அருகே ஒரு கிழிந்த நீல நிற சூட்கேஸில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உடலில் எந்த அடையாள அட்டையும் இல்லை. இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடந்திருப்பதால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பெங்களூருவில் (Bangalore) புறநகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2025 மே 21ம் தேதியான இன்று பெங்களூருக்கு அருகில் உள்ள பழைய சந்தாபூர் ரயில்வே பாலம் அருகே ஒரு கிழிந்த நீல நிற சூட்கேஸ் (Bule Suitcase) கண்டெடுக்கப்பட்டது. இதில், ஒரு இளம் பெண்ணில் உடல் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸ் ரயிலில் இருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளம் பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு ரயிலில் இருந்து வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
யார் அந்த பெண்..?
இறந்த நிலையில் சூட்கேஸில் கண்டறியப்பட்ட அந்த இளம் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவரது, பெயர், வயது மற்றும் சொந்த ஊர் பர்றிய தகவல்களை சேகரிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட சூட்கேஸை முதலில் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
காவல்துறையினர் விளக்கம்:
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு காவல்துறையினர், “அந்த இளம் பெண் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவரது உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு ரயிலில் இருந்து வீசப்பட்டது. உடலுடன் எந்த அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. நாங்கள் அவரை பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார். இது தொடர்பாக பெங்களூரு கிராமப்புற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூரு கிராமப்புற எஸ்பி சிகே பாபா தெரிவிக்கையில், “நாங்கள் விசாரணைக்கு தொடங்கியுள்ளோம். அந்த சூட்கேஸ் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக ரயில்வே காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வரும். இருப்பினும், இந்த சம்பவம் எங்கள் பகுதியில் நடந்ததால், நாங்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளோம். சூட்கேஸில் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அடையாள அட்டை அல்லது தனிப்பட்ட உடைமைகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த பெண்ணுக்கு குறைந்தது 18 வயது இருக்கலாம். இருப்பினும், அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
2 மாதத்திற்குள் அடுத்த சம்பவம்:
கடந்த 2025 மார்ச் மாதம் பெங்களூருவின் ஹுலிமாவியில் இதேபோன்ற முறையில் ஒரு சூட்கேஸில் கௌரி அனில் சம்பேகர் என்ற 32 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் ராகேஷ் சம்பேகர் புனேவில் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ராகேஷ் சம்பேகரும், கௌரி சம்பேகரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கடந்த 2025 ஜனவரி மாதம் பெங்களூருக்கு வந்தனர். பின்னர், ராகேஷ் தனது மனைவியை கொலை செய்து, ஒரு சூட்கேஸில் அடைத்து, தூக்கி எறிந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.