FIDE World Cup 2025: கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை.. எப்போது தொடங்குகிறது..?
Goa to Host FIDE World Chess Cup 2025: 2025 அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை கோவாவில் FIDE உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, டெல்லி, அகமதாபாத் போட்டியை நடத்துவதற்குப் போட்டியிட்டன.

சர்வதேச செஸ் போட்டிகளின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான FIDE உலகக் கோப்பை (FIDE World Cup 2025) வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி முதல் 2025 நவம்பர் 27ம் தேதி வரை கோவாவில் (Goa) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, முன்னதாகவே, இந்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் எங்கு நடைபெறும் என்று மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், 2025 ஆகஸ்ட் 26ம் தேதியான இன்று கோவாவில் நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
போட்டியில் இருந்த சென்னை:
முன்னதாக, FIDE உலகக் கோப்பை சென்னை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் போட்டியில் இருந்தன. தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரான புது டெல்லி போட்டியை நடத்தும் இடமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் எழுந்ததால், கோவா இறுதியாக போட்டியை நடத்தும் அங்கீகாரத்தை பெற்றது.




இதுகுறித்து FIDE தலைவர் அர்கடி டுவோர்கோவிச் தெரிவிக்கையில், “கோவாவின் பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவை FIDE உலகக் கோப்பை நடத்த ஒரு அற்புதமான பின்னணியாக அமைகின்றன. வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதன் ஆற்றல் மற்றும் வசீகரத்திற்கு பிரபலமான ஒரு இடத்துடன் உலகத் தரம் வாய்ந்த செஸ் போட்டியை விளையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.
ALSO READ: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான டிக்கெட் இலவசம்..!
உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாக் அவுட் போட்டியாகும். அஜர்பைஜானின் பாகுவில் நடந்த 2023 பதிப்பில் ஆர். பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்தார். இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த 2023 உலகக் கோப்பையில் டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் விதித் குஜராத்தி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர், இதன் மூலம் கடைசி எட்டு போட்டிகளில் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்தனர்.
உலகக் கோப்பையின் வடிவம் என்ன?
🔥 The FIDE World Cup 2025 is coming to Goa! 🇮🇳
🗓️ From October 30 to November 27, 2025, the world’s top players will gather on India’s west coast for one of the most exciting chess events.
🎯 Every round is win-or-go-home, making the World Cup one of the most dramatic… pic.twitter.com/Kb4Pp5thln
— International Chess Federation (@FIDE_chess) August 26, 2025
FIDE உலகக் கோப்பை 2025 போட்டியில் 206 வீரர்கள் எட்டு சுற்றுகளாக இரண்டு ஆட்டங்கள் கொண்ட நாக் அவுட் முறையில் போட்டியிடுவார்கள். ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் நீடிக்கும். முதல் இரண்டு நாட்களில் இரண்டு வீரர்களுக்கு இடையில் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெறும். ஒருவேளை போட்டி சமனில் முடிந்தால், தேவைப்பட்டால் மூன்றாவது நாளில் டை-பிரேக்குகள் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் சுற்றில், முதல் 50 வீரர்களுக்கு பை (ஒரு பை என்பது ஒரு வீரரை புள்ளிகளைப் பெறவோ அல்லது விளையாடாமல் ஒரு சுற்றில் உட்காரவோ அனுமதிக்கிறது) வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 51 முதல் 206 வரை தரவரிசைப்படுத்தப்பட்ட வீரர்கள் போட்டியிடுகின்றனர். மேல் பாதி 50 பேரும், தலைகீழ் கீழ் பாதி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜோடிகளாகப் பிரிக்கப்படுகிறார்கள். FIDE உலகக் கோப்பை என்பது முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு 2026 கேண்டிடேட் போட்டிக்கு நேரடித் தகுதியை வழங்கும் நிகழ்வாகும். இது உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியாளரை தேர்வு செய்யும்.