BWF World Championships: உலக சாம்பியன்ஷிப்பில் பி.வி. சிந்து அதிரடி தொடக்கம்.. பல்கேரியா வீராங்கனையை 40 நிமிடங்களுக்குள் வீழ்த்தி அசத்தல்!
PV Sindhu Wins BWF World Championships: பி.வி. சிந்து BWF உலக சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் பல்கேரியாவின் கலோயன் நல்பன்டோவாவை 23-21, 21-6 என்ற கணக்கில் வீழ்த்தி 32வது சுற்றுக்கு முன்னேறினார். ஆரம்பத்தில் சில சிரமங்களை எதிர்கொண்டாலும், அபாரமான ரிவர்சல் மூலம் வெற்றி பெற்றார்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் முன்னாள் சாம்பியனுமான பி.வி.சிந்து (PV Sindhu), BWF பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் (BWF World Championships) தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார். பாரிஸில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பில் இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 26ம் தேதி பல்கேரியாவின் கலோயன் நல்பன்டோவாவை தோற்கடித்து சிந்து இரண்டாவது சுற்றுக்கு அதாவது 32வது சுற்றில் நுழைந்தார். உலகின் 15வது இடத்தில் பிவி சிந்து ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் வேகத்தை அதிகரித்து போட்டியை 42 நிமிடங்களுக்குள் வென்றார்.
என்ன நடந்தது..?
BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் 69வது தரவரிசையில் உள்ள நலபந்தோவாவை 23-21, 21-6 என்ற கணக்கில் சிந்து தோற்கடித்தார். 30 வயதான இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடக்கத்தில் சில தவறுகளை செய்து ஒரு கட்டத்தில் 0-4 என பின்தங்கினார். நலபந்தோவா அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொண்டு 11-7 என முன்னிலை வகித்தார். இடைவேளைக்கு பிறகு பிவி சிந்து அதிரடியான பல ஸ்மாஷ்களை அடித்து ஸ்கோரை 12-12 என சமன் செய்தார். இதனை தொடர்ந்து, நலபந்தோவா அடுத்தடுத்து 2 தவறுகளை செய்ய சிந்து 14 – 12 என முன்னிலை பெற்றார். இதன்பிறகு, இரு வீராங்கனைகளுக்கும் இடையிலான புள்ளிகள் பரிமாற்றம் காரணமாக முன்னிலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்தது.




பிவி சிந்து அசத்தல்:
PV SINDHU MOVES INTO ROUND OF 32 💥
She defeated Kaloyana Nalbantova 🇧🇬 23-21, 21-6 at BWF World Championships 2025 🏸
Dominance by Sindhu in 2nd Game! 🔥 pic.twitter.com/rSz2YNUaM9
— The Khel India (@TheKhelIndia) August 26, 2025
நலபந்தோவாவுக்கு 19-20 என ஒரு கேம் பாயிண்ட் முதலில் கிடைத்தது. ஆனால், அதை சரியாக நலபந்தோவா பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மீண்டும் நலபந்தோவாக்கு மற்றொரு கேம் பாயிண்ட் கிடைத்தது. அதையும் தவறவிட்டார். பின்னர் பிவி சிந்து தனக்கு கிடைத்த முதல் கேம் பாயிண்டிலேயே ஆட்டத்தை வென்றார். இரண்டாவது கேமில் சிந்து சிறப்பாகத் தொடங்கி விரைவில் 5-1 என முன்னிலை பெற்றார்.
ALSO READ: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பைக்கான டிக்கெட் இலவசம்..!
பின்னர் நலபந்தோவா இடைவெளியை 5-6 ஆகக் குறைத்தார், ஆனால் இடைவேளை வரை இந்திய வீராங்கனை ஆறு புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். இதன் பிறகு சிந்து தனது முன்னிலையை 17-5 ஆக அதிகரித்ததால் போட்டி ஒருதலைப்பட்சமாக மாறியது. பின்னர் இந்திய வீராங்கனை பிவி சிந்து 15 மேட்ச் பாயிண்டுகளைப் பெற்று 2வது கோலாக மாற்றி போட்டியை வென்றார்.