Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025 Asia Cup Prize Money: கோடியில் கொட்டப்போக்கும் பணம்.. ஆசியக் கோப்பை வெற்றியாளருக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?

Asia Cup Winners Prize: 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. சாம்பியன் அணிக்கு 300,000 டாலர் (ரூ.2.6 கோடி) பரிசுத்தொகை எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 150,000 டாலர் (ரூ.1.3 கோடி) வழங்கப்படலாம். 2022 ஐ விட அதிகரித்த பரிசுத்தொகை இந்த ஆண்டு போட்டியில் எதிர்பார்க்கப்படுகிறது.

2025 Asia Cup Prize Money: கோடியில் கொட்டப்போக்கும் பணம்.. ஆசியக் கோப்பை வெற்றியாளருக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?
இலங்கை கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2025 11:16 AM

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2025 செப்டம்பர் 4ம் தேதி துபாய் செல்கிறது. ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற முன்னணி கிரிக்கெட் நாடுகளும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஹாங்காங் ஆகிய அணிகளும் சாம்பியம் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடும். இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!

எவ்வளவு பரிசுத்தொகை..?

2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியைப் போலன்றி, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடைபெறுகிறது. இது 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், 2025 ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை 300,000 அமெரிக்க டாலர்களாக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2.6 கோடி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு டி20 வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை வென்ற 200,000 அமெரிக்க டாலர்களை விட 50% அதிகமாகும்.

2025 ஆசிய கோப்பை இரண்டாம் இடம் பெறும் அணி 150,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1.3 கோடியாக வழங்கலாம். இது கடந்த 2022ம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் 2ம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணி பெற்ற 100,000 அமெரிக்க டாலர்கள் அதாவது 80 லட்சத்தை விட அதிகம்.

ALSO READ: ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற வீரருக்கு டெங்கு.. வேறு வீரர் மாற்ற வாய்ப்பா?

ஆட்ட நாயகனுக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?

2022ம் ஆண்டு, இலங்கையின் பானுக ராஜபக்ஷ இறுதிப் போட்டியில் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில், வனிந்து ஹசரங்கா 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் 66 ரன்களையும் எடுத்து போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றாட். இதற்காக அவருக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 13 லட்சம் ரூபாய்) வழங்கப்பட்டது. இந்த முறை “ஆட்ட நாயகனுக்கு” சுமார் 5,000 டாலர்கள் (சுமார் 4.3 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என்றும், “தொடர் ஆட்ட நாயகனுக்கு” இதை விட பெரிய தொகை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.