Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Asia Cup 2025: ஆசிய கோப்பை ஸ்பான்சர் இல்லாமல் விளையாடப்போகும் இந்தியா?

Indian Cricket Team: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளது. ட்ரீம் 11 நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம், புதிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தால் முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம் புதிய ஸ்பான்சரை தேடும் பணி பிசிசிஐ-யால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Asia Cup 2025: ஆசிய கோப்பை ஸ்பான்சர் இல்லாமல் விளையாடப்போகும் இந்தியா?
இந்திய கிரிக்கெட் அணி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Aug 2025 07:48 AM

2025 ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு விளையாட்டிலும் பங்குபெறும் அணிகள் மற்றும் வீரர்களுக்கான ஒவ்வொரு தேவையும் ஏதேனும் ஒரு நிறுவனத்தாலும் ஸ்பான்சர் செய்யப்படும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை அந்த ஸ்பான்சர் நிறுவனங்களும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால் பல நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்திருக்கிறது. கடைசியான ஆன்லைன் சூதாட்ட செயலியான ட்ரீம் 11 ஸ்பான்சர் செய்திருந்தது. ஆனால் சமீபத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடும் என சொல்லப்படுகிறது.

அமலுக்கு வந்த சூதாட்ட தடைச் சட்டம்

கடந்த 2023 ஜூலை மாதம் ட்ரீம் 11 நிறுவனம் கடும் போட்டிக்கு மத்தியில் சுமார் ரூ.358 கோடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டது. ஒரு சர்வதேச போட்டிக்கு ரூ.1.20 கோடி என்ற கணக்கில் ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டச் செயலிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அதற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பைக்கு முன்பு அதிர்ச்சி.. பிசிசிஐ – ட்ரீம் 11 ஒப்பந்தம் முறிவு.. டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா இந்திய அணி?

அந்த வகையில் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ட்ரீம் 11 நிறுவனம் செயல்பட்டு வந்தாலும் இது ஆன்லைன் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகவே பார்க்கபப்டுகிறது. சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க அந்நிறுவனம் இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது.

பிசிசிஐயின் முடிவு என்ன?

இதனிடையே புதிய டைட்டில் ஸ்பான்சரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக களம் கண்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை புதிய ஸ்பான்சருக்கான ஒப்பந்தம் செய்யப்பட உள்ள நிலையில் இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிசிசிஐ அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய ஸ்பான்சரைக் கண்டுபிடிப்பது குறித்து விவாதங்கள் நடந்த நிலையில் இதற்காக பிசிசிஐ எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.

இதையும் படிங்கAsia Cup 2025: கவாஸ்கர் முதல் ரோஹித் வரை.. ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் பட்டியல்!

மேலும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆசிய கோப்பை தொடங்குவதால் போட்டிக்கான ஒப்பந்தம் சரியான நேரத்தில் செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் சூதாட்ட செயலி தடை சட்டம் கடந்த வாரம் இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ட்ரீம் 11 அதன் தளத்தில் பணம் சார்ந்த அனைத்து ஆன்லைன் கேமிங் போட்டிகளையும் நிறுத்தி வைப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.