Dhruv Jurel: ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற வீரருக்கு டெங்கு.. வேறு வீரர் மாற்ற வாய்ப்பா?
Dhruv Jurel Dengue Fever: இந்திய அணியின் ரிசர்வ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்க மாட்டார்.

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக, வருகின்ற 2025 செப்டம்பர் 4ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 2025 டி20 ஆசிய கோப்பை போட்டிக்காக இந்திய அணி புறப்படும். இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் (Indian Cricket Team) மொத்தம் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 15 வீரர்கள் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ரிசர்வ் வீரர்களில் ஒருவரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் (Dhruv Jurel) டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, நடந்து வரும் உள்நாட்டு போட்டியான துலீப் டிராபியில் இருந்து துருவ் ஜூரல் விலக்கப்பட்டுள்ளார்.
ALSO READ: உடற்தகுதி தேர்வில் விராட் கோலிக்கு விலக்கா..? மீண்டும் இந்திய அணியில் விஐபி சலுகையா?




துலீப் டிராபியிலிருந்து ஜூரல் விலகல்:
Dhruv Jurel will miss the Duleep Trophy semi-final as he is down with dengue.#DuleepTrophy2025 #DhruvJurel #CricketTwitter pic.twitter.com/G8QGyCDdGy
— InsideSport (@InsideSportIND) September 3, 2025
துலீப் டிராபியின் அரையிறுதிச் சுற்று வருகின்ற 2025 செப்டம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த சுற்றில் மத்திய மண்டல அணியை துருவ் ஜூரல் வழிநடத்தவிருந்தார். இருப்பினும், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஜூரல், அரையிறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். துலீப் டிராபியின் அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் துருவ் ஜூரல் இல்லாதது மத்திய மண்டல அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
துலீப் டிராபி காலிறுதிப் போட்டியிலும் துருவ் ஜூரல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், ஜூரல் இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக துருவ் ஜூரல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட துருவ் ஜூரலுக்குப் பதிலாக விதர்பா கேப்டன் அக்ஷய் வாட்கர் மத்திய மண்டல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள துருவ் ஜூரல்:
மேலே குறிப்பிட்டுள்ளபடி, துருவ் ஜூரல் ஆசிய கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், ஜூரலின் நோய் இந்திய அணியின் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரிசர்வ் வீரர்கள் யாரும் பிரதான அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்க மாட்டார்கள் என்பதால், ஆசிய கோப்பைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் யாராவது காயமடைந்தால் மட்டுமே இந்த வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள்.
ALSO READ: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்சித் ராணா, ரிங்கு சிங்
ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர்