Asia Cup 2025: ஆசியக் கோப்பைக்கு இந்த 5 வீரர்கள் போவது கிடையாது.. பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. காரணம் என்ன..?
Indian Team Reserve Players: 2025 ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ளது. ஆனால், பிசிசிஐ 5 ரிசர்வ் வீரர்களை அனுப்ப மாட்டதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் என்பதால் எடுக்கப்பட்டது.

2025 ஆசிய கோப்பையானது (2025 Asia Cup) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆசிய கோப்பை போட்டிக்கு சற்று முன்பு, பிசிசிஐ (BCCI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ள 5 வீரர்கள் இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) மட்டுமே துபாய்க்கு புறப்படும் . இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தையும் பிசிசிஐ தற்போது தெளிவு படுத்தியுள்ளது.
ஏன் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது?
பி.டி.ஐ வெளியிட்ட செய்தியின்படி, பிசிசிஐ அணியின் 5 ரிசர்வ் வீரர்கள் இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளது . இந்திய அணிக்கு மாற்றாக யாராவது தேவைப்படும்போது மட்டுமே அந்த வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், குறைவான மக்களுடன் பயணம் செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




ALSO READ: ஆசியக் கோப்பையில் திடீரென போட்டி நேரம் மாற்றம்.. தாமதமாக விளையாடும் 8 அணிகள்..!
ரிசர்வ் வீரர்கள் துபாய் செல்லாதது ஏன்..?
🚨 Asia Cup 2025 Update
BCCI names Yashasvi Jaiswal, Prasidh Krishna, Riyan Parag, Washington Sundar & Dhruv Jurel as standby players.They will not travel with the main squad to UAE & will join only if required (PTI).#AsiaCup2025 #TeamIndia #CricketUpdates pic.twitter.com/DHk37hs7Q2
— Crictoday (@crictoday) August 30, 2025
2025 ஆசிய கோப்பைக்கான மாற்று செயல்முறையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு வீரர் கடுமையான காயத்தால் பாதிக்கப்பட்டு முழு போட்டியிலிருந்தும் வெளியேறினால் மட்டுமே மருத்துவ ஊழியர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். இதன் பிறகு, இந்த அறிக்கை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ( ACC ) தொழில்நுட்பக் குழுவிற்கு அனுப்பப்படும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொழில்நுட்பக் குழு அறிக்கையை ஆராய்ந்து வீரரை விலக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். ஒப்புதலைப் பெற்ற பின்னரே ரிசர்வ் வீரர் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு இந்திய அணியில் இணைவார்கள்.
இந்திய அணி எப்போது துபாய் செல்கிறது..?
இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 4ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கும். பயிற்சியின் போது, வீரர்கள் துபாயின் வெப்பம் மற்றும் ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய அணியின் முழு அட்டவணை:
இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராகவும், வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி தனது 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 3வது மற்றும் கடைசி ஆட்டத்தில் வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமானுக்கும் எதிராகவும் விளையாடுகிறது.
ALSO READ: ஆசியக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள்.. முதலிடத்தில் விராட் கோலி!
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர் ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா , சிவம் துபே , அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா , ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங்.
ரிசர்வ் வீரர்கள் : பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் , ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் .