Asia Cup Highest Runs: ஆசியக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள்.. முதலிடத்தில் விராட் கோலி!
Virat Kohli Asia Cup Record: 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் விராட் கோலி 183 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. இந்தப் பட்டியலில் பாபர் அசாம், யூனிஸ் கான், முஷ்ஃபிகுர் ரஹீம், சோயிப் மாலிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை (Asia Cup) வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சாதனை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) படைத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி இந்த சாதனையை படைத்தார். கடந்த 13 ஆண்டுகளில் விராட் கோலியின் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்களும் , ஒரு பேட்ஸ்மேன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஆசியக் கோப்பை டி20 வடிவத்திலும் விராட் கோலி பெயரே முதலிடத்தில் உள்ளது.
ஆசிய கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள்:
விராட் கோலி:
Virat Kohli in icc events+ Asia cup
Runs: 4787(most)
Average:63.83( highest)
Strike rate:103.28
Hs:183
100s:10
50+ score:46( most)
Pott:3 ( most)
Trophies:6( most)Greatest batter in multinational events 🐐 pic.twitter.com/pU55sD2gDC
— Yousuf (@141_at_adelaide) July 23, 2024
ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான 330 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது, விராட் கோலி 183 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன் காரணமாக இந்திய அணி 13 பந்துகள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை வென்றது. அந்த போட்டியில் விராட் கோலி தனது இன்னிங்ஸில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை தெறிக்கவிட்டிருந்தார்.




ALSO READ: ஆசியக் கோப்பையில் டாப் 6 அதிரடி பார்ட்னர்ஷிப்கள்.. விராட் கோலி – கே.எல். ராகுல் சாதனை!
பாபர் அசாம்:
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் . கடந்த 2023ம் ஆண்டு நேபாளத்திற்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 151 ரன்கள் எடுத்திருந்தார்.
யூனிஸ் கான்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யூனிஸ் கான் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் யூனிஸ் கான் 122 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 144 ரன்கள் எடுத்தார்.
முஷ்ஃபிகுர் ரஹீம்:
வங்கதேச விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் 4வது இடத்தில் உள்ளார் . 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரஹீம் 150 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 144 ரன்கள் எடுத்திருந்தார்.
ALSO READ: ஆசியக் கோப்பையில் திடீரென போட்டி நேரம் மாற்றம்.. தாமதமாக விளையாடும் 8 அணிகள்..!
சோயிப் மாலிக்:
பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் சோயிப் மாலிக் 5வது இடத்தில் உள்ளார் . கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சோயிப் 127 பந்துகளில் 18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 143 ரன்கள் எடுத்தார்.