Asia Cup Trophy Controversy: இந்திய அணி எப்போது ஆசிய கோப்பையை கிடைக்கும்? நக்விக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை!
India didn't collect Asia Cup trophy: ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போது, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரால் இந்திய அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) இறுதிப் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இருப்பினும், இந்திய அணிக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்படவில்லை. வெற்றிக்கு பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க இந்திய அணி மறுத்துவிட்டது. விதிகளின்படி, சாம்பியன் வெல்லும் அணிக்கு கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (Asian Cricket Council) தலைவருக்கு முதல் உரிமை உண்டு. பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹ்சின் நக்வி, ஏசிசி தலைவராக மட்டுமே இருந்திருந்தால், இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை பெற்றிருக்கும். ஆனால், நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகள் காரணமாக, பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி ஏற்க மறுத்துவிட்டது. இந்தநிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கோப்பை வழங்கப்படுமா? இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
நக்வி செய்த செயல்:
ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்துவிட்டது. அப்போது, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரால் இந்திய அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது. இருப்பினும், ஆசிய கோப்பையை இந்திய அணி பெறாத காரணத்தினால் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆசிய கோப்பையை எடுத்துக்கொண்டு தனது ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.




ALSO READ: பும்ரா தரமான செய்கை.. நொந்துபோன பாகிஸ்தான் வீரர்!
பிசிசிஐ எச்சரிக்கை:
A stellar performance tonight ⭐️⭐️⭐️
Describe Tilak Varma’s masterful knock 👇
Scorecard ▶️ https://t.co/0VXKuKPkE2#TeamIndia | #AsiaCup2025 | #Final pic.twitter.com/YLiNomf8YA
— BCCI (@BCCI) September 28, 2025
மொஹ்சின் நக்வியின் நடத்தைக்கு எதிராக பிசிசிஐ எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதையடுத்து, பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, மொஹ்சின் நக்விக்கு தனது தவறைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். ஆசியக் கோப்பை கோப்பையை விரைவில் இந்திய அணிக்குத் திருப்பி தர வேண்டும். இது விரைவில் நடக்கவில்லை என்றால், மொஹ்சின் நக்வி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நக்வி விரைவில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கவில்லை என்றால், வருகின்ற 2025 நவம்பர் மாதம் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி மாநாட்டில் பிசிசிஐ இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து புகார் அளிக்கக்கூடும். இதன் பொருள் மொஹ்சின் நக்வி கோப்பையை இந்தியாவிடம் திருப்பித் தர வருகின்ற 2025 அக்டோபர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி ஒழுங்கு நடவடிக்கை
ஐ.சி.சி. தவறான நடத்தைக்கு ஒரு ஒழுங்கு நடவடிக்கையை கொண்டுள்ளது. ஐ.சி.சி. நடத்தை விதிகளின் கீழ் அவர்கள் நிலைமையை மதிப்பாய்வு செய்யலாம். இது ஏதேனும் விதிகள் மீறப்பட்டதா என்பதை தீர்மானிக்கும், அப்படியானால், மீறல்களுக்கு யார் பொறுப்பு, என்ன தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதை தீர்மானிக்கும்.
ALSO READ: கடைசி கட்டத்தில் பரபரப்பு… பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்:
2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இலக்கை துரத்திய இந்திய அணி 20வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்து ஆசிய கோப்பை வரலாற்றில் 9வது முறையாக கோப்பையை வென்றது.