Hardik Pandya: காயம் காரணமாக மீண்டும் வாய்ப்பு மிஸ்? ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்ட்யா?
India vs Australia ODI Series: ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா வெளியேறி முழுவதும் குணமடைந்தால் மட்டுமே, 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியை பிசிசிஐ வெளியிடும்போது மட்டுமே முழு விவரங்கள் தெரியவரும்.

2025 ஆசியக் கோப்பையில் (2025 Asia Cup) பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) காயம் காரணமாக விளையாடவில்லை. இலங்கைக்கு எதிரான இறுதி சூப்பர் 4 சுற்று போட்டியில் ஹர்திக் ஒரு ஓவரை மட்டுமே வீசிவிட்டு வெளியேறினார். அந்த போட்டியின்போது ஹர்திக் பாண்ட்யா முழங்கால் பிரச்சனையால் போராடி வந்ததாக கூறப்படுகிறது. போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா குவாட்ரைசெப்ஸ் காயம் அதாவது தொடைக்கும் முழங்காலுக்கும் இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் என்பது தெரியவந்தது. இதன் விளைவாக, அவருக்கு இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, சிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த காயத்தினால் ஹர்திக் பாண்ட்யா சுமார் 4 வாரங்கள் ஓய்வில் இருப்பார். இதன் காரணமாக, வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை திட்டமிடப்பட்ட ஆஸ்திரேலியாவுக்கு (India vs Australia) எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறமாட்டாரா..?
ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா வெளியேறி முழுவதும் குணமடைந்தால் மட்டுமே, 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியை பிசிசிஐ வெளியிடும்போது மட்டுமே முழு விவரங்கள் தெரியவரும். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு பிறகு, இந்திய அணி 2025 அக்டோபர் 29ம் தேதி முதல் 2025 நவம்பர் 8ம் தேதி வரை 5 டி20 போட்டிகளில் விளையாடும். ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில், ஒருநாள் அணியில் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டராக யார் இடம் பெறுவார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது.




ஹர்திக் பாண்ட்யாவிற்கு மாற்று வீரர் யார்..?
ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டால், சிவம் துபே இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டராக இடம் பெறலாம். ஏனென்றால், தற்போது இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மாற்று வீரராக சிவம் துபேவை தவிர வேறு எந்த வீரரும் இல்லை. இருப்பினும், சிவம் துபே தனது பந்துவீச்சில் மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சிவம் துபே ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை:
கடந்த 2019ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக சிவம் துபே, கடந்த 6 ஆண்டுகளில் 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். விராட் கோலியின் தலைமையில் 2019ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிவம் துபே அறிமுகமானார். இவரது கடைசி ஒருநாள் போட்டி 2024ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமைந்தது.
ALSO READ: முட்டாள்தனம்.. பாகிஸ்தான் பயிற்சியாளரை சாடிய அக்தர்!
இந்திய அணிக்காக 4 ஒருநாள் போட்டிகளில் 43 ரன்களுடன், ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதேநேரத்தில், டி20 போட்டிகளில் சிவம் துபே 41 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும், 581 ரன்களையும் எடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில், ஒருநாள் போட்டிகளில் நிர்வாகமும், கேப்டன் ரோஹித் சர்மாவும் நம்பிக்கை வைப்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை. இந்திய அணி அறிவிப்புடன் இது விரைவில் வெளியாகலாம்.