Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rohit Sharma: பயிற்சியில் பேட்டிங்கில் சிதறவிடும் ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலிய தொடருக்கு ஆயுத்தமா..?

Australia ODI Series 2025: ரோஹித் சர்மா 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார். சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் ஓய்வுக்குப் பின், ரோஹித் சர்மா தீவிர பயிற்சி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Rohit Sharma: பயிற்சியில் பேட்டிங்கில் சிதறவிடும் ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலிய தொடருக்கு ஆயுத்தமா..?
ரோஹித் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Sep 2025 19:11 PM IST

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வருகின்ற 2025 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறார். இதுதொடர்பாக, ரோஹித் சர்மா (Rohit Sharma) தற்போது பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி (Indian Cricket Team) சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பிறகு, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் 2025 சீசனின்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்தநிலையில், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக ஊடக பக்கத்தில் ரோஹித் சர்மா தொடர்பான வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோவில் ரோஹித் சர்மா பெரிய ஷாட்களை பறக்கவிட்டார். வீடியோவின் கீழ், “இது ஒரு நீண்ட கால நண்பர்” என்று தலைப்பிட்டார். மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்துள்ள காணொளி சமீபத்தியது அல்ல. இந்த காணொளி ஐபிஎல் 2025 காலத்தைச் சேர்ந்தது. காணொளியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்ற ஊழியர்கள் பவுண்டரி எல்லைகளில் நின்றிருந்தனர்.

ALSO READ: ஆசியக் கோப்பை ஆடுகளத்தில் அடுக்கப்பட்ட சாதனை.. வரலாறு படைத்த இந்திய அணி!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)


ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா தனது உடல் எடையை குறைத்துவிட்டார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் சென்டரில் நடந்த உடற்பயிற்சி தேர்வில் ரோஹித் தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போது, ரோஹித் பல கிலோ எடையைக் குறைத்து, மிகவும் ஃபிட்டாக இருந்தார்.

ஆசிய கோப்பையில் இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டிக்கு சற்று முன்பு எடுக்கப்பட்டது. இருப்பினும், 2025 செப்டம்பர் 10ம் தேதி ரோஹித் சர்மா தனது பயிற்சியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மா தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் சமீபத்தியது போல் தெரிகிறது. இந்த புகைப்படத்தின் பின்ன்னால், மும்பை இந்தியன்ஸ் லோகோ பின்னணியில் காணப்படுகிறது. இந்த இடுகையின் இரண்டாவது புகைப்படம் அவர் மைதானத்தில் ஓடுவது போன்றது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?

ரோஹித் சர்மா எப்போது களத்திற்குத் திரும்புவார்?


2025 அக்டோபர் மாதம் இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இந்த 2025ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி ரோஹித் சர்மா களத்தில் காணப்படுவார்.