Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs UAE Asia Cup 2025: UAEக்கு எதிராக முதல் போட்டி! இந்திய பிளேயிங் லெவனில் சாம்சனுக்கு இடமா? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

India vs UAE T20I Head to Head: ஆசிய கோப்பை 2025 துவங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியை 2025 செப்டம்பர் 10 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக துபாயில் விளையாடுகிறது. இந்திய அணி 9வது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs UAE Asia Cup 2025: UAEக்கு எதிராக முதல் போட்டி! இந்திய பிளேயிங் லெவனில் சாம்சனுக்கு இடமா? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Sep 2025 11:10 AM IST

ஆசிய கோப்பை 2025 (2025 Asia Cup) சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2025 செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து, இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2025 செப்டம்பர் 10ம் தேதி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் அணியான இந்திய அணி 9வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி போட்டியை ஒரு பெரிய வெற்றியுடன் தொடங்க விரும்பினாலும், UAE போன்ற ஒரு அணியை எளிதாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது. எனவே, இந்திய அணி கவனத்துடன் விளையாடுவது முக்கியம்.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேருக்கு நேர் சாதனை:


இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் டி20 சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. இந்தப் போட்டி 2016 ஆசியக் கோப்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது தவிர, ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டுள்ளது. இதில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியுள்ளது.

ALSO READ: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா..? செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!

சமீபத்திய டி20 போட்டிகளில் இந்திய அணியின் சாதனை சிறப்பாக உள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி 27 போட்டிகளில் விளையாடி, 24 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியையும் சந்தித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணி பட்டத்திற்கான போட்டியாளராகக் கருதப்படுவதற்கான காரணத்தை இந்த எண்ணிக்கையே காரணம்.

துபாய் பிட்ச் எப்படி..?

துபாய் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சமநிலையானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த முறை ஆசிய கோப்பைக்கான புதிய ஆடுகளங்களில் சிறிது புல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் நிறைய உதவிகளைப் பெறலாம். இதன் காரணமாக, இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை களமிறக்கலாம். அதே நேரத்தில், வெப்பமான வானிலை மற்றும் ஈரப்பதம் வீரர்களின் உடற்தகுதி மற்றும் உத்தியை கடுமையாக சோதிக்கும்.

ALSO READ: இந்தியா – யுஏஇ இடையிலான கிரிக்கெட் போர்.. எப்போது, எங்கே, எப்படி போட்டியை காண்பது?

கணிக்கப்பட்ட இந்திய அணியின் விவரம்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி.

கணிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் விவரம்:

முஹம்மது வாசிம் (கேப்டன்), அலிஷான் ஷராபு, ராகுல் சோப்ரா (விக்கெட் கீப்பர்), ஆசிப் கான், முஹம்மது ஃபரூக், ஹர்ஷித் கவுஷிக், முஹம்மது ஜோஹைப், முஹம்மது ஜவதுல்லா, சாகீர் கான், ஹைதர் அலி மற்றும் ஜுனைத் சித்திக்.