Suryakumar Yadav: இந்தியாவிற்கு எதிரான காரியத்தை செய்தாரா சூர்யகுமார் யாதவ்..? கொந்தளித்த ரசிகர்கள்..!
Asia Cup 2025 Controversy: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோர் கைக்குலுக்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பஹல்காம் தாக்குதல் தொடர்பான நக்வியின் வரலாறு காரணமாக, இந்திய ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாலர் சந்திப்பிற்காக சூர்யகுமார் யாதவ் (Suryakumr Yadav) உள்பட அனைத்து அணியின் கேப்டன்களும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியும் உடனிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு வீடியோ வெளியானது. அதில், ஏசிசி தலைவர் மொக்சின் நக்வியும் (Mohsin Naqvi), இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவும் கைலுக்கி கொண்டனர். இது இந்திய மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்கு காரணம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா மீது ஏவுகணைகளை வீசுவதாக மிரட்டிய அதே மொஹ்சின் நக்விதான்.
என்ன நடந்தது..?
ACC President Mohsin Naqvi met with all the captains and unveiled the Asia Cup trophy. 🏆
pic.twitter.com/0UDrCOafGa— Sheri. (@CallMeSheri1_) September 9, 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதட்டத்திற்கு மத்தியில் ஆசிய கோப்பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியும் கைகுலுக்கிக் கொண்டதில் அனைவரின் பார்வையும் நிலைத்திருந்தது. ஆரம்பத்தில், சூர்யகுமாரும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்க மறுத்ததாக சமூக ஊடகங்களில் கூறப்பட்டது.




ALSO READ: இந்தியா – யுஏஇ இடையிலான கிரிக்கெட் போர்.. எப்போது, எங்கே, எப்படி போட்டியை காண்பது?
இது சிறிது நேரத்திற்கு பிறகு வதந்தி என்பதால் சூர்யகுமாரும் நக்வியும் கைகுலுக்கிக் கொள்வதைக் காட்டியது. கைகுலுக்கலின் கிளிப் விரைவில் வைரலாக பரவியது, இந்திய ரசிகர்களிடமிருந்து கடுமையான கோபத்தை கிளப்பியது. முன்னதாக, 2025 ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பு அனைத்து கேப்டன்களையும் ஏசிசி தலைவர் நக்வி வரவேற்றார். அப்போதுதான், சூர்யகுமார் யாதவ் நக்வியை வரவேற்று கைலுக்குவதை காணலாம். இந்த உரையாடல் நட்பு ரீதியாகவும் தொழில்முறை ரீதியாகவும் இருந்தபோதிலும், சில இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. பல ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் “வெட்கக்கேடானது” மற்றும் “தேசபக்தியற்றது” என்று கூறி வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் செய்த செயல்:
True character of our cricket players
Pakistan sponsored terrorists killed two of our bravehearts today and the bcci captain has all the smiles on his face while meeting Mohsin Naqvi , PCB Chairman who wanted a nuclear attack on Bharat Mata 🇮🇳
If this is sports diplomacy than… pic.twitter.com/rz0AOwUVBM
— Major Pawan Kumar, Shaurya Chakra (Retd) 🇮🇳 (@major_pawan) September 9, 2025
2025 செப்டம்பர் 14ம் தேதி 2025 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை காண இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ஏசிசி தலைவர் மொஹ்சின் நக்வியுடன் சூர்யகுமார் யாதவின் இந்தப் புகைப்படம் நிச்சயமாக இந்திய ரசிகர்களை சற்று கோபப்படுத்தியுள்ளது.
ALSO READ: UAEக்கு எதிராக முதல் போட்டி! இந்திய பிளேயிங் லெவனில் சாம்சனுக்கு இடமா? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
பஹல்காம் தாக்குதலில் என்ன நடந்ததோ அதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமாகிவிட்டன. ஆசியக் கோப்பையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால் இந்திய அரசாங்கம் பிசிசிஐயை ஆசியக் கோப்பையில் விளையாட அனுமதித்தது. இப்போது இந்திய அணி ஆசியக் கோப்பையில் விளையாட துபாயில் உள்ளது.