Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி

RCB's IPL Victory Turns Tragic: 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஐபிஎல் வெற்றிக்குப் பின் ஏற்பட்ட ரசிகர் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 3 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கும், இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

Virat Kohli: 11 ரசிகர்களின் மரணம்! 20 பேர் காயம்! 3 மாதங்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த விராட் கோலி
விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Sep 2025 17:16 PM

18 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கடந்த 2025 ஜூன் 3ம் தேதி ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆர்சிபி ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழாவாக அமைந்தது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டுவதற்காக கூடியிருந்தனர். இதன் பின்னர், கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர். 3 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி (Virat Kohli) இந்த மோசமான நிகழ்வு குறித்து தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது விராட் கோலியும் மற்ற ஆர்சிபி வீரர்கம் பெங்களூரு மைதானத்திற்குள் இருந்தனர். இங்கு ஒரு பெரிய கூட்டம் கூடிய நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் ஒரு கூட்டம் கூடி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு இன்று அதாவது 2025 செப்டம்பர் 3ம் தேதி விராட் கோலி தனது அறிக்கையில், உயிர் இழந்தவர்களைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ: உடற்தகுதி தேர்வில் விராட் கோலிக்கு விலக்கா..? மீண்டும் இந்திய அணியில் விஐபி சலுகையா?

என்ன சொன்னார் விராட் கோலி..?


முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி போன்ற ஒரு சோகத்திற்கு வாழ்க்கையில் எதுவும் உங்களை தயார்படுத்தாது. இது எங்கள் அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது ஒரு சோகமாக மாறியது. உயிரை இழந்த ரசிகர்களின் குடும்பங்களை நினைத்து நான் பிரார்த்தனை செய்கிறேன், காயமடைந்த ரசிகர்களையும் நினைத்து நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் இழப்பு இப்போது எங்கள் கதையின் ஒரு பகுதியாகும். நாம் அனைவரும் எச்சரிக்கை, மரியாதை மற்றும் பொறுப்புடன் முன்னேறுவோம்” என்று கோலி கூறியதாக ஆர்சிபி தெரிவித்துள்ளது.

ALSO READ: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

நடந்தது என்ன..?

ஐபிஎல் 2025ல் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 2025 ஜூன் 3ம் தேதி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பின்னர், அடுத்த நாளான கடந்த 2025 ஜூன் 4ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முழு அணிக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது,  இருப்பினும், இந்த பாராட்டு விழாவின் போது யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, எம். சின்னசாமி ஸ்டேடியம் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசலில் மேலும் 20 பேர் காயமடைந்தனர். இதன் பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு, அந்த அணி ஆர்சிபி கேர்ஸைத் தொடங்கி, அதில் உயிரிழந்த ரசிகரின் குடும்பங்களுக்கு நிதி உதவியை அறிவித்தது.