Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

R Ashwin: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற அவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனியிடம் பிடித்தார். ஐபிஎல் போட்டிகளிலும் வீரர், கேப்டன் என அசத்தினார்.

R Ashwin: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பு!
அஸ்வின்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 27 Aug 2025 11:38 AM IST

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் மற்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற அவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணிக்காக 9 போட்டிகளில் மட்டுமே விளையாட தேர்வு செய்யப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாகவும், தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறும் அவர் கோரியதாக சொல்லப்பட்டது. இப்படியான நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

அஸ்வின் வெளியிட்ட பதிவு

Also Read:  சென்னை அணிக்கு வர விரும்பும் சஞ்சு சாம்சன்.. ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்த செக்.. முழிக்கும் சிஎஸ்கே நிர்வாகம்!

அஸ்வின் தனது பதிவில், “இன்று சிறப்பான நாள். அதனால் ஒரு சிறப்பு ஆரம்பம் பற்றி அறிவிக்கிறேன். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள். அதனால் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது நேரம் இன்று முடிவடைகிறது, ஆனால் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் தொடர் விளையாட்டை ஆராய்பவராக எனது நேரம் இன்று தொடங்குகிறது. பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்த அனைத்து அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளுக்கும், மிக முக்கியமாக, அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அஸ்வினின் ஐபிஎல் வரலாறு

அஸ்வின் முதல் முறையாக 2008ல் ஐபிஎல் போட்டி தொடங்கியபோது சென்னை அணிக்காக விளையாடினார். தொடர்ந்து அந்த அணிக்காக எட்டு சீசன்களில் அவர் விளையாடினார். இதன்பின்னர் சென்னை அணி சூதாட்ட புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் புனே அணிக்காக விளையாடினார்.

Also Read: சிஎஸ்கே வெளியிடும் அஸ்வினின் ஆவணப்படம்! காதல் கதையை பகிர்ந்த அஸ்வினின் மனைவி!

அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதன்பின்னர் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஐபிஎல் சீசனில் மீண்டும் சென்னை அணிக்காக களம் கண்டார். ஹர்பஜன் சிங்கிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றார்.