Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB Breaks Silence: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

Royal Challengers Bengaluru: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஜூன் 4, 2025 அன்று நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் மூன்று மாத மௌனத்திற்குப் பிறகு, "RCB கேர்ஸ்" என்ற புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், சம்பவத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

RCB Breaks Silence: 3 மாத மௌனத்தை கலைத்த ஆர்சிபி.. உயிரிழந்த ரசிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
ஆர்சிபி துயரம்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2025 18:39 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 28ம் தேதி சமூக ஊடகங்களில் தனது 3 மாத மௌனத்தை கலைத்து, அதன் ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வமான செய்தியை கொடுத்துள்ளது. அதனுடன், ‘12வது மனிதர் படை’, ’ஆர்சிபி கேர்ஸ்’ என்ற புதிய முயற்சியையும் அறிவித்துள்ளது. கடந்த 2025 ஜூன் மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுவதும், காயமடைந்தவர்களுக்கு உதவி வழங்குவது இந்த குழுவின் நோக்கமாகும். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, இன்று 2025 ஆகஸ்ட் 28ம் தேதி, ஆர்சிபி முதல் இடுகையை வெளியிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஐபிஎல் 2025 சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஜூன் 3ம் தேதி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் வென்றது.

இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த நாள், ஜூன் 4 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பெரும் கூட்டம் காரணமாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். பின்னர் ஆர்சிபி சமூக ஊடகங்களில் வருத்தத்தை தெரிவித்தது. பின்னர் அவர்களின் சமூக ஊடகங்களில் இருந்து எந்த பதிவையும் வெளியிடப்படவில்லை.

ALSO READ: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நிவாரண நிதி அறிவிப்பு:


2025 ஜூன் 4 அன்று, எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பதிவை ஆர்சிபி பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு, விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் அதன் பின்னர் உரிமையாளரின் சமூக ஊடகங்கள் செயல்படவில்லை. இப்போது 3 மாதங்களுக்குப் பிறகு, இன்று பதிவிட்ட பிறகு, உரிமையாளர் ஆர்சிபி கேர்ஸ் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.

RCB பகிர்ந்து கொண்ட பதிவில், ”அன்புள்ள 12th மேன் ஆர்மி, இந்தக் கடிதம் உங்களுக்கானது. நாங்கள் எங்கள் கடைசி பதிவை இங்கே பதிவிட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகின்றன. இந்த மௌனம் நாங்கள் இல்லாதது அல்ல, இது துக்கத்தின் வெளிபாடு. இந்த இடம் ஒரு காலத்தில் மிகுந்த சக்தியாலும், நினைவுகளாலும், நீங்கள் மிகவும் ரசித்த தருணங்களாலும் நிறைந்திருந்தது. ஆனால் ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் அனைவரின் இதயங்களையும் உடைத்தது. அப்போதிருந்து, அமைதி இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த அமைதியில் நாங்கள் துக்கமடைந்தோம். கேட்டோம். கற்றுக்கொண்டோம். ஒரு எதிர்வினைக்கு அப்பால், நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம்.

ALSO READ: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!

ஆர்சிபி கேர்ஸ் உருவானது இப்படித்தான். இது எங்கள் ரசிகர்களை கௌரவிக்க, குணப்படுத்த மற்றும் அவர்களுடன் நிற்க வேண்டிய அவசியத்திலிருந்து பிறந்தது. எங்கள் சமூகம் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட அர்த்தமுள்ள செயலுக்கான ஒரு தளம். இன்று நாங்கள் இந்த இடத்திற்கு திரும்பி வந்துள்ளோம், கொண்டாட அல்ல. ஆனால் அக்கறை கொள்ள, உங்களுடன் பகிர்ந்து கொள்ள, உங்களுடன் நிற்க, ஒன்றாக வளர, கர்நாடகாவின் பெருமையாகத் தொடர.” என்று தெரிவித்தது.