Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி – ஆம் ஆத்மியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சூர்ய குமார் யாதவ் – நடந்தது என்ன?

Suryakumar Yadav : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை போட்டிகளில் தான் பெற்ற வருமானத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி – ஆம் ஆத்மியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த சூர்ய குமார் யாதவ் – நடந்தது என்ன?
சூர்யகுமார் யாதவ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Sep 2025 15:45 PM IST

ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), இந்த போட்டியில் தனக்கு கிடைத்த வருமானம் முழுவதையும்  காஷ்மீர் பகுதியிலுள்ள பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.  இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சௌரப் பரத்வாஜ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவரது விமர்சனத்துக்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

என்ன நடந்தது?

சில நாட்களுக்கு முன்பு, டெல்லியின் முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மியின் கட்சி தலைவருமான சௌரப் பரத்வாஜ், சூர்யகுமார் யாதவ் குறித்து கிண்டல் செய்யும் விதமாக, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்காக வெற்றியை சமர்பிக்கிறேன் என்று சொல்வது எளிது. ஆனால் உனக்கு, பிசிசிஐக்கும் போட்டிகளில் கிடைக்கும் வருவாய், விளம்பர பணம், ஒளிபரப்பு உரிமையின் மூலம் கிடைத்த பணம் ஆகியவற்றையெல்லாம் 26 விதவைகளுக்கு கொடு. அப்போதுதான் உன் அர்ப்பணிப்பு உண்மையென்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்,” என்று சவால் விடுத்திருந்தார்.

இதையும் படிக்க : 2025 ஆசியக் கோப்பையில் கோடியை அள்ளப்போவது யார்..? பரிசுத்தொகையை எவ்வளவு தெரியுமா?

சூர்யகுமார் யாதவின் பதிலடி

இந்த நிலையில் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய பின், கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த ஆசியக் கோப்பை தொடர் முழுவதிலும் எனக்கு கிடைக்கும் வருமானத்தை இந்தியப் படையினருக்கும், பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நன்கொடையாக வழங்குகிறேன். அவர்கள் எப்போதும் என் நினைவில் இருக்கிறார்கள். ஜெய் ஹிந்த்,” என்று பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவின் எக்ஸ் பதிவு

 

அமித் மால்வியா விமர்சனம்

இந்த பதிவுக்குப் பிறகு, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில்,  ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ, இந்திய அணியின் கேப்டனை சவால் செய்யத் துணிந்தார். ஆனால் நம் கேப்டன் அவருக்கு அழகாகவும் உறுதியான முறையிலும் பதிலடி கொடுத்துள்ளார், என்று அவர் தனது உரையில் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க : டி20யில் அனைத்திலும் நம்பர் 1.. பந்துவீச்சாளர் தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி முதலிடம்!

அமித் மால்வியாவின் பதிவு

 

சூர்யகுமார் யாதவின் முடிவு பலராலும் பாராட்டப்பட்டாலும், பாரத்வாஜின் சவால் மற்றும் மால்வியாவின் கடுமையான விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் சூடான விவாதமாக மாறியுள்ளது.