IND vs PAK Final: இந்தியா – பாகிஸ்தான் பைனலில் மழைக்கு வாய்ப்பு..? யாருக்கு சாம்பியன் பட்டம்?
IND vs PAK Rain Chances: இந்தியா vs பாகிஸ்தான் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..? மழை பெய்தால் எந்த அணிக்கு கோப்பை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையேயான 2025 ஆசிய கோப்பையின் (2025 Asia Cup) இறுதிப் போட்டி (IND vs PAK Final) நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவது இதுவே முதல் முறை. இந்த இரு அணிகளும் முன்னதாக கடந்த 2025 செப்டம்பர் 14ம் தேதி லீக் ஸ்டேஜ் போட்டியிலும், 2025 செப்டம்பர் 21ம் தேதி சூப்பர் 4 சுற்றிலும் மோதியது. இந்த 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது. அதன்படி, 2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மூன்றாவது முறையாக மோதுகிறது. இந்தப் போட்டி இறுதிப்போட்டி என்பதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..? மழை பெய்தால் எந்த அணிக்கு கோப்பை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இலங்கை போட்டியில் காயம்.. ஃபைனலில் விளையாடுவாரா ஹர்திக் பாண்ட்யா?
மழை பெய்தால் விதிகள் என்ன?
இந்தியா vs பாகிஸ்தான் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியின்போது துபாயில் தெளிவான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வேறு எந்த காரணத்திற்காகவும் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி இறுதிப் போட்டியை நடத்த முடியாவிட்டால், அது ரத்து செய்யப்படாது. இதனை தொடர்ந்து, 2025 செப்டம்பர் 29ம் தேதி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




ரிசர்வ் நாளில் இறுதிப் போட்டி முடிவு செய்யப்படாவிட்டால், இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும். இருப்பினும், மழை அல்லது புயல் முன்னறிவிப்பு இல்லாததால், ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
ALSO READ: முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை எப்படி?
இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் இதுவரை நேருக்கு நேர்:
இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி உள்ளிட்ட பலதரப்பு போட்டிகளில் 5 இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளன. அவற்றில் 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (1985) மற்றும் டி20 உலகக் கோப்பை (2007) ஆகியவற்றில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. அதேநேரத்தில், 1986 மற்றும் 1994 ஆசியக் கோப்பைகளிலும் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. கடைசியாக 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியையும் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.