Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அபிஷேக் சர்மா அதிரடி… சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

Asia Cup 2025 : ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவித்தது.

அபிஷேக் சர்மா அதிரடி… சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
Ind Vs Sri Lanka
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Sep 2025 00:33 AM IST

ஆசிய கோப்பை (Asia Cup 2025)சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. துபாயில் செப்டம்பர் 26 அன்று  நடைபெறும் இந்த போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தியா சார்பாக சிவம் துபே மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட  தோல்வியடையாமல் வலுவான அணியாக இருந்து வருகிறது.  இதற்கிடையில், இலங்கை மோசமான ஃபார்மில் உள்ள இலங்கை அணி போட்டியில் வென்றாக வேண்டியிருக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை

இலங்கை டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிவம் துபே மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களையும் களமிறக்கியுள்ளது. இதற்கிடையில், சாமிகா கருணாரத்னவுக்குப் பதிலாக ஜனித் லியானாவை அணியில் சேர்த்துள்ளதாக இலங்கை கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.

இதையும் படிக்க : பல கேட்சை விட்டாலும் மேட்சை விடாத இந்தியா.. வங்கதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறிய சூர்யா படை!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா சுப்மன் கில் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். மஹீஷ் தீக்ஷனா ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்தில் அவரிடமே கேச்ட் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், நிதானமாக ஆடினார். இந்த நிலையில் அவரும் வந்த சிறிது நேரத்திலேயே ஹசரங்கா பந்தில் எல்பிடபுள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அபிஷேக் சர்மா சாதனை

ஒரு பக்கம் விக்கெட்டுகள் போனாலும் அபிஷேக் சர்மா அதிரடி காட்டினார். இந்த போட்டியில் அரை சதம் கடந்த அவர் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற முகமது ரிஸ்வான் மற்றும் விராட் கோலியின் சாதனைகளை அவர் முறியடித்தார். அவர் ஆசிய கப் போட்டிகளில் 282 ரன்கள் குவித்து அசத்தினார்.  இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் தரும் அவர்,  ஹாட்ரிக் அரைசதம் அடித்துள்ளார்.

இதையும் படிக்க : BCCI: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக புகார்.. ஐசிசியிடம் முறையிட்ட பிசிசிஐ!

மற்றொரு பக்கம் திலக் வர்மா தன் பங்குக்கு அதிரடி காட்டினார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என 49 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஒரு ரன்னில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவருடன் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் 23 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷான்கா மற்றும் குசால் மெண்டிஸ் களமிறங்கினர். மெண்டிஸ் ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்தார். இந்த நிலையில் நிஷான்காவுடன் குஷல் பெரேரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நான்கு புறமும் சிதறடித்தனர்.

இருவரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இருவரும் அரை சதம் அடித்த நிலையில் இலங்கை அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. ஒரு வழியாக குஷல் பெரேரா வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 32 ரன்களை எதிர்கொண்டு ஒரு சிக்ஸ், 8 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து சாரித் அசலன்கா களமிறங்கினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு பக்கம் அதிரடியாக ஆடிய பதும் நிஷன்கா 54 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரிகள் என தனது சதத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி சரியாக 202 ரன்கள் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

இந்த நிலையில் சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் களமிறங்கினர். இலங்கை அணி ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.