Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IND vs PAK T20 Record: முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை எப்படி?

IND vs PAK Asia Cup Final: ஆசிய கோப்பை மட்டுமின்றி, உலக கோப்பை உள்ளிட்ட மற்ற சர்வதேச போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இதுவரை டி20 சர்வதேச போட்டிகள் பெரும்பாலும் மிகக் குறைந்த ஸ்கோர்களே பதிவாகியுள்ளன.

IND vs PAK T20 Record: முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை எப்படி?
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Sep 2025 15:03 PM IST

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை (2025 Asia Cup) இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (India – Pakistan) நேருக்குநேர் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது நாளை அதாவது 2025 செப்டம்பர் 28ம் தேதி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியை காண இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆசிய கோப்பை மட்டுமின்றி, உலக கோப்பை உள்ளிட்ட மற்ற சர்வதேச போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டிகள் பெரும்பாலும் மிகக் குறைந்த ஸ்கோர்களே பதிவாகியுள்ளன. இந்தநிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டி20 போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோர்கள் பற்றிய போட்டிகளை ஆராய்வோம்.

பாகிஸ்தானின் குறைந்தபட்ச ஸ்கோர் – 83 ரன்கள்

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மிர்பூரில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்படி, பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இது இந்தியா-பாகிஸ்தான் டி20 வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோராக பதிவாகியுள்ளது. இந்தியா இந்தப் போட்டியில் எளிதாக வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அபிஷேக் சர்மா அதிரடி… சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

2024 டி20 உலகக் கோப்பை போட்டி:

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. பதிலுக்கு, இந்தியா 119 ரன்களை மட்டுமே 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி இந்தியா-பாகிஸ்தான் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த த்ரில்லர் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2025 ஆசிய கோப்பை லீக் ஸ்டேஜ்:

2025ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியிலும் பாகிஸ்தானின் பேட்டிங் 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி 127/9 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியம்:

கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு சிறிய ஸ்கோருக்கு சுருண்டது. அந்த போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்களின் அற்புதமான செயல்பட்டு, பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்குள் சுருட்டின. இந்த போட்டியிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

ALSO READ: இலங்கை போட்டியில் காயம்.. ஃபைனலில் விளையாடுவாரா ஹர்திக் பாண்ட்யா?

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா – பாகிஸ்தான் இடையில் இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 12 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதாவது, ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவது இதுவே முதல் முறை. கடந்த 1984ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை விளையாடப்பட்டு வருகிறது. இதுவரை இரு அணிகளும் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் விளையாடியது கிடையாது.