Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India A vs Australia A: ரோஹித் மற்றும் கோலி எங்கே? கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்! இந்திய ஏ அணி அறிவிப்பு!

India A ODI Squad vs Australia A: ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கோலி மற்றும் ரோஹித் இருவரும் இந்தியா ஏ அணிக்காக விளையாட வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்பியதாக செய்திகள் வந்தன. இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட அணியில் அவர்களின் பெயர்கள் இல்லாதது இப்போது ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

India A vs Australia A: ரோஹித் மற்றும் கோலி எங்கே? கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர்! இந்திய ஏ அணி அறிவிப்பு!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Sep 2025 08:01 AM IST

வருகின்ற 2025 செப்டம்பர் 30ம் தேதி கான்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் ரெட்-பால் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருப்பார் என்றாலும், ரோஹித் சர்மாவிற்கு (Rohit Sharma) பிறகு இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டனாக அவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. முதுகுவலி பிரச்சனை காரணமாக ரெட்-பால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று ஷ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் தெரிவித்தார். இந்தியா ஏ அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங், ஆல்ரவுண்டர்கள் ரியான் பராக் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பையில் விளையாடும் ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங், இரண்டாவது (2025 அக்டோபர் 3) மற்றும் மூன்றாவது (2025 அக்டோபர் 5) போட்டிகளுக்கு இந்தியா ஏ அணியுடன் இணைவார்கள். 2025 அக்டோபர் 1 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் விதர்பாவுக்கு எதிரான இரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கோலி மற்றும் ரோஹித் இருவரும் இந்தியா ஏ அணிக்காக விளையாட வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்பியதாக செய்திகள் வந்தன. இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட அணியில் அவர்களின் பெயர்கள் இல்லாதது இப்போது ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர்களுக்கு வேண்டுமென்றே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தேர்வாளர்களின் திட்டங்கள் மாறிவிட்டனவா என்பது குறித்து சஸ்பென்ஸ் தொடர்கிறது. இதற்கிடையில், இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கும் பிசிசிஐ இரண்டு வெவ்வேறு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா ஏ அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரபாசிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷு ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜபனீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, பிரபாசிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யான்ஷு ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜபனீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேண்டாம்! 5 வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?

இந்திய அணி (இரானி கோப்பை):

ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜூயல், ருதுராஜ் கெய்க்வாட், யாஷ் துல், ஷேக் ரஷீத், இஷான் கிஷன், தனுஷ் கோட்டியன், மானவ் சுதார், குர்னூர் ப்ரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், அன்ஷூல் கம்போஜ். இதன் மூலம், மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்து தேசிய அளவிலான அரங்கில் திறமையை நிரூபிக்க இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்கியுள்ளது.