Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான குஷான பேரரசு நாணயம்…இரு உருவங்கள்…பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!

Kushan Empire Coins : பாகிஸ்தானில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வெண்கல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் குஷா ன பேரரசு காலத்தை சேர்ந்தது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நாணயத்தில் இரு புறங்களிலும் இரு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன .

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான குஷான பேரரசு நாணயம்…இரு உருவங்கள்…பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!
பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குஷான பேரரசு நாணயம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Jan 2026 12:43 PM IST

பாகிஸ்தானில் ராவல்பிண்டி அருகே உள்ள தட்சசீலம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் அந்த நாட்டை சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழைய காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ததில், அந்த நாணயங்கள் குஷான பேரரசு காலத்தை சேர்ந்தது என்பதும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் தெரியவந்தது. மேலும், குஷான பேரரசின் கடைசி பேரரசர்களில் ஒருவரான வாசுதேவாவின் 2- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயம் என்றும் கூறப்படுகிறது. இதே போல, தட்ச சீலம் அருகே உள்ள பீர் மவுண்ட் என்ற இடத்தில் விலை மதிப்பற்ற லேபிஸ் லாசுலி என்ற நீலக்கல் துண்டுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த நீலக்கலானது நாணயங்களை விட தொன்மையானதாகும். தற்போது, கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும்.

நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள இரு உருவங்கள்

இந்த நாணயத்தின் ஒரு புறத்தில் மன்னர் வாசுதேவாவின் உருவமும், மற்றொரு புறத்தில் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உருவங்களானது குஷான மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மற்றும் பின்பற்றாமல் பல்வேறு மதங்களை சேர்ந்த கடவுள்களையும் வழிபட்டுள்ளதை எடுத்து காண்பிக்கிறது. இதே போல, குஷான மன்னர்கள் கிரேக்க, ஈரானிய, இந்தியா மற்றும் புத்த மத கடவுள்களையும் தங்கள் நாணயங்களில் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க: PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை” இஸ்ரோ தலைவர் தகவல்..

தட்ச சீலத்தில் உலகளாவிய் வணிக மையம்

இந்த நாணயம் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள தட்ச சீலம் ஒரு காலகட்டத்தில் உலக அளவிலான வணிக மையமாக இருந்ததை உறுதி செய்கிறது. தட்ச சீலமானது அப்போதைய மௌரிய பேரரசின் தலைநகராக இருந்த பாடலிபுத்திரம் என்னும், இன்றைய பீகார் தலைநகரான பாட்னாவுடன் கலாச்சார மற்றும் வணிக பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், கனிஷ்கர் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியின் கீழ், தட்ச சீலம் நிர்வாக மையமாக மாறியதுடன், பாரசீகம், கிரகம் மற்றும் இந்திய கலைகள் இணைந்த காந்தார கலை வளரவும் முக்கிய இடமாக திகழ்ந்துள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வெண்கல நாணயம்

இந்தியாவில் அவ்வப்போது பழைய காலத்து செப்பு நாணயங்கள், வெண்கல நாணயங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இதே போல, தமிழகத்திலும் முற்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் ராஜாக்களின் சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதே போல, பாகிஸ்தானில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான குஷான பேரரசு காலத்தை சேர்ந்த வெண்கல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பட்டம் விடும் விழாவில் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ்.. உடனிருந்து பட்டம் விட்ட பிரதமர் மோடி!