Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை” இஸ்ரோ தலைவர் தகவல்..

இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட  PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில்  பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார்

PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை”  இஸ்ரோ தலைவர் தகவல்..
PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jan 2026 11:39 AM IST

ஆந்திரா, ஜனவரி 12: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. தொடர்ந்து, தோல்விக்கான தரவுகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களை PSLV-C62 ராக்கெட் சுமந்து சென்றது. 3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ x தள பதிவு:

 

3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டதாகவும், இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட  PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில்  பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால், திட்டமிடப்பட்ட பாதையில் பயணத்தைத் தொடர முடியவில்லை. நாங்கள் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும் வரும் தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.