Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.. 13,000 விமானங்கள் ரத்து.. பொதுமக்கள் பாதிப்பு!

Heavy Snow Storm In America | அமெரிக்காவை கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அங்கு பனிப்புயல் நிலவி வரும் நிலையில், விமானங்கள் ரத்து, மின்சார துண்டிப்பு என அமெரிக்க மக்கள் மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.. 13,000 விமானங்கள் ரத்து.. பொதுமக்கள் பாதிப்பு!
சாலைகளை மூடி கடும் பனி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jan 2026 18:07 PM IST

வாஷிங்டன், ஜனவரி 26 : அமெரிக்காவில் (America) கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அங்கு பனிப்புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அங்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் பனிப்புயல் வீச தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மிக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவை வாட்டி, வதைத்து வரும் கடும் பனிப்பொழிவின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்காவில் நேற்று (ஜனவரி 25, 2026), இன்றும் (ஜனவரி 26, 2026) பனிப்புயல் நிலவும் என வானிலை  ஆய்வு மையம் கூறியிருந்தது. அதேபோல அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களின் கிளைகளில் பனி உறைந்துள்ள நிலையில், அதன் கிளைகள் உடைந்து மின் கம்பங்களின் மீது விழுந்து லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களை மின்வெட்டு சூழ்ந்துள்ளது.

இதையும் படிங்க : ஏஐ-ஆல் வெள்ளை காலர் வேலைக்கு ஆபத்து…அரசுகள் தயாராக வேண்டும்…பில்கேட்ஸ் எச்சரிக்கை!

பனிப்புயலால் 14 கோடி மக்கள் பாதிப்பு

அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான சூழல் காரணமாக நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்கால எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்.. பிரதமர் மோடியை பாராட்டிய அதிபர் டிரம்ப்

பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு விமான போக்குவரத்து சேவையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.