உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு.. 67,800 ஆண்டுகள் பழமையானது!
Oldest Cave Painting Found In Indonesia | உலக அளவில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தோனேசியாவில் உலகின் மிகவும் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜகார்த்தா, ஜனவரி 23 : உலகின் மிகவும் பழனையாப குகை ஓவியம் இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள முனா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதரால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குகை ஓவியங்கள் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான குகை ஓவியங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகின் மிகவும் பழனையாப குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
அந்த குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களிலேயே மிகவும் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற ஓவியங்களில் பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களை கொண்ட மனித உருவங்கள் காணப்பட்டன. குகைச் சுவரில் கைகளை வைத்து, அதன் மீது நிறங்களை ஊற்றி இந்த உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில விரல் நுணிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : க்ரீன்லாந்து ஏன் அமெரிக்காவிற்கு முக்கியம்? அதிபர் டிரம்ப் பகிர்ந்த புகைப்படங்கள்
67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம்
Archaeologists have discovered prehistoric cave art in Liang Mentanduno, Indonesia, believed to be the world’s oldest rock art.
The faded outline of a hand, dated at least 67,800 years old, was found amid more recent paintings, where it had previously gone unnoticed.
— BFM News (@NewsBFM) January 22, 2026
இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது, ஸ்பெயினில் உள்ள 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தல் கை அச்சை விட பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய சூழலில் உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமையான குவை ஓவியம் இவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.