ஏஐ-ஆல் வெள்ளை காலர் வேலைக்கு ஆபத்து…அரசுகள் தயாராக வேண்டும்…பில்கேட்ஸ் எச்சரிக்கை!
Microsoft Co Founder Bill Gates: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் வெள்ளை காலர் வேலைக்கு ஆபத்து உள்ளதாகவும், இதனை தடுப்பதற்கு அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார். இதனால், அந்த வேலைகள் ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து, டாவோசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பங்கேற்று உரையாற்றி இருந்தார். அதில், சேர்க்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் பயன்பாட்டால் வெள்ளை காலர் வேலைகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இந்த மாற்றத்துக்கு அரசுகள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் வெள்ளை காலர் வேலைகளில் மட்டுமின்றி நீல காலர் வேலைகளிலும் ஈடுபட வாய்ப்பு உள்ளது. சமத்துவமின்மை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பில்கேட்சின் இந்த கருத்துப்படி, மக்களுக்கு புதிய திறன்களை கற்பிக்க வேண்டுமா அல்லது வரிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்
தற்போது வரை செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறைவாகவே உள்ளது. ஆனால், இந்த நிலை எதிர் காலத்தில் இப்படியே நீடிக்க வாய்ப்பு இல்லை. கடந்த தொழில்நுட்ப புரட்சிகளை விட செயற்கை நுண்ணறிவு மிக வேகமாகவும், ஆழமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மென்பொருள் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உற்பத்தித்திறனை அதிகரித்து வருவதாகவும், துறைகளில் குறைந்த திறன் கொண்ட வேலைகளை நீக்கி வருவதாகவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா.. என்ன விஷயம்?




இந்தியா-அமெரிக்கா வலிமை இறுதி வரை நீடிக்கும்
இந்த மாற்றத்தை முறையாக நிர்வாகிக்காவிட்டால், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா- அமெரிக்கா உறவு குறித்து பில்கேட்ஸ் கூறுகையில், இரு நாடுகளும் வலுவான அடித்தளமாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார். பில் கேட்ஸை பொருத்தவரை இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவை விரைவாக ஏற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியா- அமெரிக்க உறவுகளின் வலிமை இறுதிவரை நீடிக்கும் என்று பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
மென்பொருள் மேம்பாட்டில் செய்ற்கை நுண்ணறிவு
மென்பொருள் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏற்கெனவே உற்பத்தித் திறனை அதிகரிப்பதையும், தளவாடங்கள் மற்றும் அழைப்பு மையங்களில் குறைந்த திறன் கொண்ட பாத்திரங்களை மாற்றுவதையும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இந்த மாற்றம் கவனிக்கப் படாவிட்டால், சமத்துவமின்மையை நிலை நிறுத்தி, செல்வத்தையும் வாய்ப்பையும் குறைவான மக்களின் கைகளில் குவிக்கக்கூடும்.
மேலும் படிக்க: அபுதாபி BAPS கோயில் ஒற்றுமையின் சின்னம் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலாச்சார ஆலோசகர் பாராட்டு