இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப் பட நாயகன் இவரா? வைரலாகும் தகவல்
Director Sudha Kongara: இந்திய சினிமாவில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக இயக்க உள்ள பட்ம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்தாலும் சுதா கொங்கரா இயக்குநராக அறிமுகம் ஆனது தெலுங்கு சினிமாவில்தான். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் துரோகி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்றுப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசுல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதன்படி இயக்குநர் சுதா கொங்கரா உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று, சூரரைப் போற்று மற்றும் இறுதியாக வெளியான பராசக்தி என அனைத்துப் படங்களும் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்தே திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ள நடிகர் குறித்து தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப் பட நாயகன் இவரா?
அதன்படி சுதா கொங்கரா தனது அடுத்த படத்தை ரவி மோகனை கதாநாயகனாக வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். மேலும் நடிகர் ரவி மோகனின் சினிமா அறிவு மற்றும் நடிப்புத் திறமையால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார். ‘பராசக்தி’ படத்தின் போது, படத்தின் கதைக்களத்திற்காகத் தயாராவதற்கு நடிகர்கள் பல சர்வதேசப் படங்களைப் பார்க்குமாறு அவர் பரிந்துரைத்தார், ஆனால் ரவி மோகன் ஏற்கெனவே அவற்றில் பெரும்பாலான படங்களைப் பார்த்திருந்தார் என்பதால் அவர்மீது மிகுந்த மரியதை ஏற்பட்டு அவருடன் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Also Read… அல்லூ அர்ஜூன் படம் எப்படி இருக்கும்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #SudhaKongara is planning to do her next film with #RaviMohan as the HERO. She’s mightily impressed with the actor’s cinematic knowledge and expertise in acting. During #Parasakthi, she suggested actors watch several international films to prepare for the movie’s subject,… pic.twitter.com/VQFUnXhtc9
— Movies Singapore (@MoviesSingapore) January 26, 2026
Also Read… பேட்ரியாட் படத்திலிருந்து வெளியானது நயன்தாராவின் போஸ்டர்!