Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா – தனுஷ் மோதல்.. ஒரே தேதியில் வெளியாகும் கருப்பு – கர?

Karuppu vs Kara: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களாக இருந்துவருபவர்கள் சூர்யா மற்றும் தனுஷ். இவர்கள் இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் சூர்யா நடித்துள்ள கருப்பு படமும் மற்றும் தனுஷ் நடித்துள்ள கர படமும் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

சூர்யா – தனுஷ் மோதல்.. ஒரே தேதியில் வெளியாகும் கருப்பு – கர?
கருப்பு vs கரImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jan 2026 11:26 AM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்கியுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டு இறுதியில்தான் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படமானது தெய்வீகம் மற்றும் நீதி தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படமும் இன்னும் வெளியாகாமல் காத்திருக்கும் நிலையில், 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகும் ஒரே தேதியில் தனுஷின் (Dhanush) கர (Kara) படமும் வெளியாகவுள்ளதாம். தனுஷின் கர படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ள நிலையில், இதன் புரோமோ வீடியோவும் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இப்படத்தை ஆரம்பத்தில் படக்குழு 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் சூர்யாவின் கருப்பு படத்துடன் ரிலீஸ்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவ தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசன் திரைப்படத்தில் இரு நாயகிகளா? அட இந்த நடிகையும் இருக்காங்களா?

கருப்பு மற்றும் கர படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

தனுஷ் மற்றும் சூர்யாவின் நடிப்பில் ஒரே தேதியில் வெளியான திரைப்படங்கள் :

தனுஷ் பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ஒரே நாளில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் உண்டு. கடந்த 2007ம் ஆண்டில் சூர்யாவின் வேல் மற்றும் தனுஷின் பொல்லாதவன் என இரு படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே தேதியில் வெளியாகியிருந்தது. அந்த வருடத்தின் தீபாவளியின்போது இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பின் தனுஷ் மற்றும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் ஒன்றாக மோதவுள்ளதாம்.

இதையும் படிங்க: அன்றே கணித்தார் வெங்கட் பிரபு.. ‘விசில் போடு’ பாடல் வந்தது தற்செயலா? – வெங்கட் பிரபு கலகல பேச்சு!

2026ம் ஆண்டி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் கருப்பு படமும் தனுஷின் கர படமும் ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுக்கள் திட்டமிட்டுவருகிறதாம். கருப்பு படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்தில் இருக்கும் நிலையில், அதன் காரணமாக ரிலீஸ் தேதியை 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.