மங்காத்தா ரீ-ரிலீஸ்.. திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய ஆதிக் ரவிச்சந்திரன்!
Mankatha Re-release Celebration: தமிழ் சினிமாவில் இறுதியாக அஜித் குமாரின் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்தவகையில் இன்று 2026 ஜனவரி 23ம் தேதியில் அஜித்தின் மங்காத்தா படமானது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், இதை இவர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்து கொண்டாடியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். இவர் விஷால் (Vishal) மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் (S.J.Suryha) மார்க் ஆண்டனி (Mark Antony) என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதற்கு முன் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சிலம்பரசனை வைத்தும் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டு அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தையும் இவர் இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சூப்பர் ஹிட்டடித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாகவும் அஜித் குமாரின் AK64 என்ற படத்தையும் இவரே இயக்கவுள்ளார். இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 23ம் தேதியில் அஜித் குமாரின் மங்காத்தா (Mankatha) படமானது ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் குமாரின் ரசிகனாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளார். சென்னை கமலா தியேட்டரில் இப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரவலாகி வருகிறது.




இதையும் படிங்க: ரீ-ரிலீஸில் வரலாறு படைக்கும் அஜித் குமாரின் மங்காத்தா.. திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை!
மங்காத்தா ரீ- ரிலீஸை திரையரங்கு சென்று பார்த்த ஆதிக் ரவிச்சந்திரன் தொடர்பான வீடியோ:
.@Adhikravi Celebrating #MankathaReRelease 🔥#AK64pic.twitter.com/ODXDswnIeN
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) January 23, 2026
மங்காத்தா ரீ-ரிலீஸ் கொண்டாட்டம் :
அஜித் குமாரின் இந்த மங்காத்தா திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டில் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித் குமார் நெகடிவ் ஷேட் கொண்ட வேடத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் நடித்து அசத்தியிருந்தார். உடன் அர்ஜுன், வைபவ், அஞ்சலி மற்றும் மகத் உள்ளிட்ட பல்வேறு பிரபங்கள் இதில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘திருவாசகம்’ பாடல் வெளியீடு!
இந்த படமானது காமெடி, ஆக்ஷன், எமோஷனல் மற்றும் அதிரடி என ஒரு கலவையான திரைப்படமாகவே அமைந்திருந்தது. இந்த 2026ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில், இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் ரீ- ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தின் ரீ-ரிலீஸுடன் புது படங்களும் வெளியாகியுள்ள நிலையில், அந்த படங்களை விடவும் இப்படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் 2025ல் ரீ- ரிலீஸில் மங்காத்தா சாதனை படைக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.