Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mankatha: ரீ-ரிலீஸில் வரலாறு படைக்கும் அஜித் குமாரின் மங்காத்தா.. திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை!

Mankatha Re-release Celebration: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றபடம்தான் மங்கத்தா. இப்படமானது 15 அன்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், 2026 ஜனவரி 23ம் தேதியன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் பல திரையரங்குகளில் இப்படமானது ப்ரீ-புக்கிங்கில் சாதனைப் படைத்து வருகிறது.

Mankatha: ரீ-ரிலீஸில் வரலாறு படைக்கும் அஜித் குமாரின் மங்காத்தா.. திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை!
மங்காத்தா மறு வெளியீடுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jan 2026 21:50 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற திரைப்படம்தான் மங்காத்தா (Mankatha). இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் அஜித் குமார் நெகடிவ் ஷேட் வேடத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வைபவ் (Vaibhav), அர்ஜுன்  (Arjun), அஞ்சலி, பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது ஆக்ஷன், காமெடி, அதிரடி என மொத்த கலவையான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.

இப்படமானது வெளியாகி இந்த 2026ம் ஆண்டுடன் 15 வருடங்களை கடந்துள்ள நிலையில், இப்படத்தய் படக்குழு ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னே அறிவித்திருந்தது. அதன்படி இப்படம் 2026 ஜனவரி 23ம் தேதியோடு ரீ- ரிலீஸ் செய்யப்படும் நிலையில், ப்ரீ- புக்கிங்கில் சாதனை படத்துவருகிறது. மேலும் பல இடங்களில் ரநாளை காட்சிகள் முழுவதும் நிரம்பியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும்?

மங்காத்தா படம் குறித்து வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

எந்த படத்தின் ரீ-ரிலீஸிற்கும் இல்லாத வரவேற்பைப் பெரும் மங்காத்தா :

இந்த மங்காத்தா படமானது ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக சிலமாதங்களுக்கு முன்னே படக்குழு உறுதிச் செய்திருந்தது. அதன்படி 2026 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகும் என அறிவித்திருந்தது. இப்படத்தின் ரிலீஸின்போது தமிழில் சில புது படங்களும் வெளியாகின்ற நிலையில், அந்த படங்களுக்கு இல்லாத வரவேற்பு ரீ- ரிலீஸாகும் அஜித் குமாரின் மங்காத்தா படத்திற்கு இருக்கிறது.

இதையும் படிங்க: ‘டி55’ படத்திற்காக புது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்.. வெளியான அறிவிப்பு இதோ!

அஜித்தின் புது படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போல இந்த மங்காத்தா படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் முழுவதும் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்தின் ப்ரீ- புக்கிங் முடிந்ததாகவும், முதல் காட்சி முதல் அன்று திரையிடப்படும் பல காட்சிகள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த படங்களுக்கும் இவ்வளவு பெரிய ஓப்பனிங் இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நிச்சயம் இப்படமும் நல்ல வசூலை பெற்று வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.