Karathey Babu: நா அரசியலையே தொழிலா பண்றவன்.. ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ரவி மோகனின் கராத்தே பாபு பட டீசர்!
Karathey Babu Teaser: நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக பார்சக்தி என்ற படமானது வெளியானது . இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் கராத்தே பாபு. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் இறுதியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி (Parasakthi) படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பராசக்தி படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியான நிலையில், உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக அரசியல் கதைக்களத்தில் ரவி மோகன் நடித்துவந்த படம்தான் கராத்தே பாபு (Karathey Babu). இப்படத்தை கவினின் டாடா (DADA) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் கே பாபு (Ganesh K Babu) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படத்தை ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது.
இப்படமானது முழுமையாக அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2026 ஜனவரி 24ம் தேதியில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: மங்காத்தா படப்பிடிப்பின் போது மறக்க முடியாத தருணம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு வைரல்!
ரவி மோகனின் கராத்தே பாபு டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
From the world of #Dada to a whole new rhythm. Very excited to share the first glimpse of my next journey. #KaratheyBabu Teaser out now! Need your love!@iam_RaviMohan @Screensceneoffl #SundarArumugam @SamCSmusic #Shakkthivasu #DaudeeJiwal @Ezhil_Dop @editorkathir @artdir_raja pic.twitter.com/Qtb6L0wD50
— ganesh.k.babu (@ganeshkbabu) January 24, 2026
கராத்தே பாபு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த கராத்தே பாபு படத்தில் நடிகர் ரவி மோகன் எம்.எல்.ஏ.ஷண்முக பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது அரசியல் நடக்கும் போட்டி, திருட்டுத்தனம் மற்றும் கொள்ளைகள் போன்றவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் இப்படம் உண்மையான அரசியல்வாதி ஒருவரின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், இதை படக்குழு முற்றிலும் மறுத்துள்ளது. இந்த படமானது எந்த ஒரு உண்மை கதாபாத்திரத்தையோ அல்லது சம்பவத்தையே மையமாக கொண்டு எடுக்கப்படவில்லை என கூறியுள்ளது.
இதையும் படிங்க: அன்றே கணித்தார் வெங்கட் பிரபு.. ‘விசில் போடு’ பாடல் வந்தது தற்செயலா? – வெங்கட் பிரபு கலகல பேச்சு!
இந்த படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை டவுடி ஜிவால் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் 2026ம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நிலையில், இப்படத்தை படக்குழு வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.