Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi Mohan : கராத்தே பாபு எனது கேரியரில் முக்கியமான படம்.. நடிகர் ரவி மோகன் பேச்சு!

Ravi Mohan About Karathey Babu Movie : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இவரின் முன்னணி நடிப்பில் கராத்தே பாபு, ஜின் மற்றும் பராசக்தி போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இதில் கராத்தே பாபு படம் பற்றி நடிகர் ரவி மோகன் விளக்கமாகப் பேசியுள்ளார்.

Ravi Mohan : கராத்தே பாபு எனது கேரியரில் முக்கியமான படம்.. நடிகர் ரவி மோகன் பேச்சு!
நடிகர் ரவி மோகன்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 02 Jun 2025 23:43 PM

நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை (kadhalikka Neramillai). இந்த படத்தைப் பிரபல  இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்த படமானது ஓரளவுதான் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன், பராசக்தி (Parasakthi), கராத்தே பாபு (Karathey Babu ) மற்றும் ஜின் (Jin)  போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கராத்தே பாபு திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் , மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படமானது முழுக்க அரசியல் கதைச் சார்ந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்துள்ளார். மேலும் சமீப காலமாக ரவி மோகன் மற்றும் அவரது மனைவி விவாகரத்து தொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இது தொடர்ந்து படங்களிலும் நடிப்பதைத் தொடரும் ரவி மோகன், கராத்தே பாபு படம் தனது கேரியரில் முக்கியமான படம் என்று கூறியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

கராத்தே பாபு படம் பற்றி ரவி மோகன் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த ரவி மோகன், கராத்தே பாபு படம் பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர் “கராத்தே பாபு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சில காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. அந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரத்தைப் போல நான் என்னை பார்த்துக்கூட கிடையாது. வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்றுதான் இந்த படத்தில் நடித்து வருகிறேன். கராத்தே பாபு படமானது எனது கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நடிகர் ரவி மோகன் பேசியுள்ளார். மேலும் பேசிய அவர் ஜின் படத்தைப் பற்றியும் கூறியுள்ளார்.

ஜின் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்தது, படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்தை விரைவில் வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்று நடிகர் ரவி மோன் கூறியுள்ளார்.

நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Ravi Mohan (@iam_ravimohan)

நடிகர் ரவி மோகன் கராத்தே பாபு மற்றும் ஜின் படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவருக்கு எதிர் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படமானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது

சென்னையில் நாளை முதல் 17 மின்சார ரயில்கள் இயங்காது...
சென்னையில் நாளை முதல் 17 மின்சார ரயில்கள் இயங்காது......
அதிகரிக்கும் பள்ளி கட்டணம் - பிரிட்ஜ் லோன் தீர்வாகுமா?
அதிகரிக்கும் பள்ளி கட்டணம் - பிரிட்ஜ் லோன் தீர்வாகுமா?...
மலையாள இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா?
மலையாள இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா?...
நடிகர் சிவாவின் நடிப்பில் வெளியானது பறந்து போ படத்தின் டீசர்!
நடிகர் சிவாவின் நடிப்பில் வெளியானது பறந்து போ படத்தின் டீசர்!...
கரீனா கபூரின் டயட் சீக்ரெட்: ஏன் சீக்கிரம் சாப்பிட வேண்டும்?
கரீனா கபூரின் டயட் சீக்ரெட்: ஏன் சீக்கிரம் சாப்பிட வேண்டும்?...
எத்தனை மகள்களுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்... ஸ்ருதி ஹாசன்!
எத்தனை மகள்களுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்... ஸ்ருதி ஹாசன்!...
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: மாநில அரசுகளுக்கு பறந்த உத்தரவு...
கணவன் - மனைவிக்கான 5 சிறந்த கிரெடிட் கார்டுகள்!
கணவன் - மனைவிக்கான 5 சிறந்த கிரெடிட் கார்டுகள்!...
'பென்ஸ்' படத்தில் இணைந்த நிவின் பாலி!
'பென்ஸ்' படத்தில் இணைந்த நிவின் பாலி!...
ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டம் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி...
அடர்ந்த காட்டில் ஒரு சாகச மலையேற்ற அனுபவத்திற்கு நீங்கள் தயாரா?
அடர்ந்த காட்டில் ஒரு சாகச மலையேற்ற அனுபவத்திற்கு நீங்கள் தயாரா?...