Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Venkat Prabhu: மங்காத்தா படப்பிடிப்பின் போது மறக்க முடியாத தருணம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு வைரல்!

Venkat Prabhu X Post : இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். அவரின் மங்காத்தா படமானது இணர் 2026 ஜனவரி 23ம் தேதியில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் அஜித் இணைந்து எடுத்த புகைப்படம் குறித்து ஸ்பெஷல் பதிவை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.

Venkat Prabhu: மங்காத்தா படப்பிடிப்பின் போது மறக்க முடியாத தருணம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு வைரல்!
அஜித், வெங்கட் பிரபு மற்றும் தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jan 2026 13:18 PM IST

தல அஜித் குமாரின் (Ajith Kumar) மங்காத்தா (Mankatha) படமானது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று 2026 ஜனவரி 23ம் தேதியில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரீ-ரிலீஸை ரசிகர்கள் சிறப்பாகவே கொண்டாடிவருகின்றனர். இந்த படத்தில் பல கோலிவுட் பிரபலங்களும் திரையரங்குகளில் சென்று பார்த்து கொண்டாடிவருகின்றனர். இந்த படமானது தற்போது ரீ- ரிலீஸிலும் சாதனைப் படைத்துவருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டில் உலகமெங்கும் ரிலீஸாகியிருந்தது. இதில் திரிஷா (Trisha), மகத், அர்ஜுன் (Arjun) உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து ஸ்பெஷல் பதிவு ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தளபதி விஜய் (Thalapathi Vijay) மற்றும் தல அஜித் குமார் இணைந்து எடுத்திருந்த புகைப்படத்தை பகிர்ந்து மங்காத்தா பட ஷூட்டிங் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். இந்த பதிவானது தற்போது அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ரீ-ரிலீஸில் வரலாறு படைக்கும் அஜித் குமாரின் மங்காத்தா.. திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை!

மங்காத்தா ஷூட்டிங் ஸ்பெஷல் தண்ருனம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்த பதிவு:

இந்த பதிவில் இயக்குநர் வெங்கட் பிரபு, “இன்று முதல் மங்காத்தா திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவேண்டிய நேரம் இது. தயவுசெய்து க்ளைமேக்ஸை வெளியிட்டு அனுபவத்தை கெடுக்காதீர்கள். தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இருக்கும் இப்புகைப்படம் மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட ஒரு மறக்க முடியாத தருணம்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய விஷால் – தமன்னாவின் புருஷன் பட ஷூட்டிங்!

இது எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது. நான் தவறு செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன், மீண்டும் இது நடக்கவேண்டும் என விரும்புகிறேன். மேலும் மங்காத்தா ரீ-ரிலீஸை கொண்டாடுவோம்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் புது திரைப்படம் :

வெங்கட் பிரபு இறுதியாக தளபதி விஜய்யின் கோட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் புது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.