Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது எப்படி?.. இதுதான் காரணமா?.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு!

Ahmedabad Air India Flight Crash First Investigation Report | ஜீன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, எஞ்ஜின் பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.

ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது எப்படி?.. இதுதான் காரணமா?.. முதல் தகவல் அறிக்கை வெளியீடு!
விமான விபத்து
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Jul 2025 08:06 AM

டெல்லி, ஜூலை : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து (Ahmedabad Air India Flight Crash) குறித்து 15 பக்க முதல் தகவல் அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம்  அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளது. இந்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு எஞ்ஜின் கோளாறு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து வெளியான முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெடித்து சிதறிய விமானம் – 241 பேர் பரிதாப பலி

ஜூன் 12, 2025 அன்று குஜராத் மாநிலம் , அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வு பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியாகம் ஜூலை 12, 2025 நள்ளிரவு வெளியிட்டது.

இதையும் படிங்க : Air India Crash : ஏர் இந்தியா விபத்து.. உயிரிழந்த அனைவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

விமான விபத்து – அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் எஞ்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் விநியோகம் தடைபட்டது. இதனால் எஞ்ஜின்கள் சக்தி குறைந்தது. அப்போது விமானி ஒருவர் மற்ற விமானியிடம் “ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்” என்று கேட்டதாக பதிவாகியுள்ளது. அதற்கு மற்ற விமானி நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார். இந்த கட்டளையற்ற நிறுத்தம் ராம் ஏர் டர்பைனில் நிலைநிறுத்தத்தை தூண்டி உள்ளது. மேலும் விமானம் உடனடியாக உயரத்தை இழக்க தொடங்கியது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விமானிகள் இரண்டு எஞ்ஜின்களையும் மீண்டும் இயக்கும் முயற்சியில் எரிபொருள் சுவிட்ச்களை மீண்டும் இயக்கியுள்ளனர். அப்போது எஞ்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்க முயற்சித்து வெற்றிகரமாக இயங்கியது. ஆனால் எஞ்ஜின் இரண்டை மீண்டும் இயக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால் அவசரகால மின் சக்தி ஆதாரமாக ராம் ஏர் டர்பைன் தானாகவே இயங்கியது என்று கூறப்பட்டுள்ளது.

180 நாட் வேகத்தை சிறிது நேரம் எட்டிய விமானம் ஏற்கனவே கீழே இறங்கி மீண்டும் உயரத்தை அடைய தவற விட்டது. இறுதி துயர அழைப்பு “மே டே” விமான நிலைய சுற்றளவுக்கு வெளியே உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் விமான மோதியதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது. விமான பாதையின் அருகே குறிப்பிடத்தக்க பறவைகளின் செயல்பாடு எதுவும் காணப்படவில்லை. விமான நிலைய சுற்றளவு சுவரை கடப்பதற்கு முன்னதாகவே விமானம் உயரத்தை இழக்க தொடங்கியது என்று அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.