புதுக்கோட்டையில் இரட்டை கொலை.. உயிரிழந்த சகோதரர்கள்.. நடந்தது என்ன?
Pudukottai Double Murder : புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு பேர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் சகோதரர்கள் கண்ணன், கார்த்திக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை, ஜூலை 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக, சகோதரர்கள் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதோடு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி அவர்களை கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படியான சூழலில், புதுக்கோட்டை இரட்டை கொலை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் காத்தமுத்து. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கண்ணன் (35), கார்த்திக் (29) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் தினக்கூலி வேலை செய்கின்றனர்.
Also Read : Group 4 தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சல்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!
புதுக்கோட்டையில் இரட்டை கொலை
இந்த நிலையில், இவர்கள் இரண்டு பேரும் திருமண மண்டபம் அருகே 2025 ஜூலை 24ஆம் தேதியான நேற்று இரவு மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே, ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Also Read : 2 குழந்தைகளை கொன்ற அபிராமி.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து, இருவரின் உடல்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்கான இருவரும் கொலை செய்யப்பட்டனர், யார் கொலை செய்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சகோதரர்கள் கார்த்தி, கண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து, கொலை கும்பலை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். புதுக்கோட்டை இரண்டு கொலை நடந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.