Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruppur Dowry Suicide Case: திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!

Dowry Torture Leads to Suicide: பிரீத்தியின் கணவர் சதீஸ்வர் மேலும் 50 லட்சம் கேட்டு பிரீத்தியை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இடையடுத்து, கணவர் சதீஷ்வர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டில் ஒருமாதமாக இருந்த நிலையில் துயரம் தாங்காமல் பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tiruppur Dowry Suicide Case: திருப்பூரில் மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை.. திருமணமான 10 மாதத்தில் பெண் தற்கொலை..!
திருப்பூர் பெண் தற்கொலைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Aug 2025 17:50 PM

திருப்பூர், ஆகஸ்ட் 6: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் (Dowry Torture) திருமணமான 10 மாதத்தில் பிரீத்தி என்பவர் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகியுள்ளது. முன்னதாக, கடந்த 2025 ஜூலை மாதம் ரிதன்யா என்ற பெண்ணும் வரதட்சணை கொடுமையால் தனது காரில் நீண்ட தூரம் பயணித்து விஷம் அருந்தி தற்கொலை (Tiruppur Women’s Death) செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவத்திற்கு முன்னதாக தனது அப்பாவிற்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மீண்டும் திருப்பூரில் அரங்கேறிய வரதட்சணை தற்கொலை:

திருமணத்தின்போது பிரீத்தியின் வீட்டார்கள் 120 சவரன் நகை, ரூ. 25 லட்சம் பணம், ரூ.38 லட்சம் இன்னோவா காரை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர் மேலும் 50 லட்சம் கேட்டு பிரீத்தியை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இடையடுத்து, கணவர் சதீஷ்வர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டில் ஒருமாதமாக இருந்த நிலையில் துயரம் தாங்காமல் பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க பெண் வீட்டார் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ: தமிழக எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு.. கொள்ளையனை கைது செய்த போலீஸ்!

ரிதன்யா வழக்கு:

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி கணவர் கவின்குமார் ரிதன்யாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி தவறான வார்த்தைகளை பயன்படுத்தி துன்புறுத்தியதாகவும், மாமியார் சித்ராதேவி மருமகள் ரிதன்யாவை பட்டினி போட்டு அறையில் பூட்டி வைத்ததாகவும் புகார் அளித்திருந்தனர். இந்த துன்புறத்தலை தாங்க முடியாமல்,, திருமணத்திற்கு 78 நாட்களுக்கு பிறகு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விவரம்:

திருப்பூர் கைகாட்டிபுதூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஆர்.ஜி. அண்ணாதுரை (53) என்பவரின் மகள் ஏ. ரிதன்யாவுக்கும், அவினாசி அருகே உள்ள பழங்காரையைச் சேர்ந்த கவின்குமாருக்கும் 2025 ஏப்ரல் 11ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், ரிதன்யாவின் பெற்றோர் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தம்பதியினரை சமாதானப்படுத்திய பின்னர், சில நாட்களுக்குப் பிறகு அவரது பெற்றோர் அவளை தனது கணவரின் வீட்டிற்கு அனுப்பினர். அதன்பிறகும், இருவரும் இடையே சண்டை ஏற்பட்டு தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

இந்தநிலையில், கடந்த 2025 ஜூன் 28ம் தேதி காலை 9.30 மணியளவில், ரிதன்யா தனது வீட்டில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு, கோவிலுக்குச் செல்வதாக தனது தாயாரிடம் கூறினார். மதியம் 1 மணியளவில் செட்டிப்புதூரில், காருக்குள் ரிதன்யா மயக்கமடைந்து, முகத்தில் நுரையுடன் காணப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவரது பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை அவினாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே உயிரிழந்தார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)