தமிழக எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு.. கொள்ளையனை கைது செய்த போலீஸ்!
Congress MP Sudha : மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகையை மர்ம நபர் பறித்து சென்றிருக்கிறார். இதில் சுதா எம்.பிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளையனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 06 : மயிலாடுதுறை எம்.பி சுதாவின் (Congress MP Sudha) நகையை பறித்த கொள்ளையனை டெல்லி போலீசார் (Delhi Police) கைது செய்துள்ளனர். மேலும், அவரது நகைகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2025 ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து எம்பிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்பி ஆக இருப்பவர் சுதா. டெல்லியில் தங்கி இருக்கும் இவர் தினமும் நாடாளுமன்றத்துக்கு சென்று வருகிறார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலையில் சாணக்கிய பூரியில் உள்ள போலந்து தூதரகத்திற்கு வெளியே நடைப்பயிற்சி நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது இவருடன் திமுக மாநிலங்களவை உறுப்பினர் சல்மாவும் உடன் இருந்தார்.
அந்த நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் எம்பி சுதா அணிந்திருந்த தங்கச செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இதனை கவனித்த சுதா செயினை காத்துக் கொள்ள சுதா அவரிடம் போராடியுள்ளார். இருப்பினும் சுதாவை தாக்கிவிட்டு அந்த நபர் சுதா அணிந்திருந்த 4.5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதில் எம் பி சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சுதா சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.




Also Read : திருப்பூரில் பயங்கரம்.. விசாரணைக்கு சென்ற போலீஸ் தலை துண்டித்து கொலை.. நடந்தது என்ன?
கொள்ளையனை கைது செய்த போலீஸ்
🚨The case of snatching of chain of Hon’ble Member of Parliament has been solved. The accused has been arrested and the chain has been recovered. More details shall be shared in due course.#DPUpdates
— Delhi Police (@DelhiPolice) August 6, 2025
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எம் பி சுதா கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் , தன் மீதான தாக்குதலால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
Also Read : 12 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. அக்கவுடன் பேசுவதை நிறுத்தாததால் வெறிச்செயல்!
இந்தியாவின் தேசிய தலைநகரில் ஒரு ஒரு பெண்ணால் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால் வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும் எனவும் நம் கைகால்கள், உயிர்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களுக்கு பயப்படாமல் எப்படி வாழ்வது எனவும் நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்வதை உறுதி செய்யுமாறும் அவர் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், செயின் பருப்பில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீஸ் ஆர் தீவிரமாக தேடி வந்த நிலையில் , தற்போது அவரை கைது செய்துள்ளனர்.