Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்.. பின்னணி என்ன?

Tirunelveli Honour Killing : திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த நிலையில், ஆவணக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கூட்டணி கட்சித் தவைர்கள் மனு அளித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்.. பின்னணி என்ன?
முதல்வர் ஸ்டாலின்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Aug 2025 11:48 AM

சென்னை, ஆகஸ்ட் 06 : தமிழக முதல்வர் ஸ்டாலினை (CM MK Stalin) 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதியான இன்று கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். ஆணவக் கொலைகளை (Honour Killing) தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்திய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திருமாவளவன், சண்முகம், முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொலையை கண்டித்து அனைத்து மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு, அனைத்து கட்சி தலைவர்களும் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்அதேபோல, பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறி இருந்தார்இப்படியான சூழலில், முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் சண்முகம், சிபிஐ முத்தரசன் ஆகிய மூன்று பேர் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என 3 கூட்டணி கட்சி தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Also Read : திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை.. ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதல்வர்.. காவல்துறைக்கு பறந்த உத்தரவு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்


மேலும், மூன்று கட்சித் தலைவர்களும் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தமிழகத்தில் சாதி, மத மறுப்பு திருமணத் தம்பதிகள் தொடர்ச்சியாக சாதி ஆணவக் கொலைகளுக்கு ஆளாவதும், சாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்ந்து வருகின்றன. சமூக சமத்துவ கண்ணோட்டத்திலும் பகுத்தறிவு சிந்தனையிலும் தாங்கள் தேர்வு செய்து கொள்ளும் வாழ்க்கையை அமைதியாக தொடர இயலாத அவலநிலைக்கு தீர்வு காண வேண்டும். அது தொடர்பான தனிச்சட்டத்தை இயக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

இதனை அடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், “ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசுககு அதிகாரம் இருப்பதால் முதல்வரிடம் பேசினோம்” என தெரிவித்தார்.