Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

Goonda Act in Armstrong Murder Case: சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு மாறாக சட்ட விதிகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Aug 2025 15:57 PM IST

சென்னை, ஆகஸ்ட் 6: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (BSP leader Armstrong) கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) ரத்து செய்தது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுக்களை இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 6ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் நீதிபது வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.

27 பேர் மீது குண்டர் சட்டம்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதையடுத்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காவல்துறை தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட 26 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக தெரிவித்தனர்.

ALSO READ: தமிழக எம்.பி சுதாவிடம் நகை பறிப்பு.. கொள்ளையனை கைது செய்த போலீஸ்!

அப்போது மனுதாரர்கள் தரப்பில், சென்னை பெருநகர காவல் ஆணையர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு தன்னிச்சையானவை. குண்டர் சட்டம் குறித்து கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் உடனடியாக தெரிவிக்க தவறிவிட்டனர். இதனால் சட்டவிதிகள் மீறப்பட்டதாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமீன் மனுக்களை பரிசிலீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ALSO READ: திமுகவிடம் கூட்டணி கட்சிகள் அடிமையா..? எழுந்த விமர்சனம்.. திருமாவளவன் பதில்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எப்படி..?

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி அப்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வட சென்னையில் உள்ள பெரம்பூர் செம்பியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மாலை 7 மணியளவில் நடந்தது. காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, 6 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து ஆம்ஸ்ட்ராங் தாந்து நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரை கொடிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்கியது. இந்த மிருகத்தனமான தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.