திருப்பூர் எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கு.. குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..
Tiruppur SI Shanmugavel Murder Case: திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளியை பிடிக்க முயன்ற போது தப்ப முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஆகஸ்ட் 7, 2025: திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தோட்டத்தில் தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கிடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடுமையாக தாக்கி அரிவாளுடன் துரத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கு சென்று சமரசம் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அப்போது உதவி ஆய்வாளர் சன்முகவேலை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
பின்னணி என்ன?
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு வயது 52. இவர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தந்தை மகன் இடையே இருந்த மோதலை தீர்க்க சென்ற சண்முகவேல் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்ல முயன்ற கும்பல்.. மும்பையில் பகீர் சம்பவம்!
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ். ஐ சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த கார்.. உயிரிழந்த கர்ப்பிணி.. திருச்சி அருகே நடந்த சோகம்..
குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை:
இந்நிலையில் தலைமுறைவாக இருந்த மணிகண்டன் சிக்கனூர் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மணிகண்டன் பிடித்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காபுக்காக போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிகண்டனில் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.