பிஎம் கிசான் 20வது தவணை குறித்து வெளியான முக்கிய தகவல்.. உடனே இத பண்ணுங்க!
PM Kisan 20th installment | பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை 19 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை எப்போது வரவு வைப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana Scheme) இதுவரை 19 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 20வது தவணை பணம் எப்போது வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பிஎம் கிசான் 20வது தவணை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜூலை 18, 2025 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 பணம் வரவு வைக்கப்படு வருவதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா, பணம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎம் கிசான் 20வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
இந்தியாவில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் அசத்தல் திட்டம் தான் பிஎம் கிசான். இந்த திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்தப்படும். அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என்ற அடிப்படையில் இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 19 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 20வது தவணை ரூ.2,000 எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
இதையும் படிங்க : PM Kisan : பிஎம் கிசான் பணம் பெற e KYC கட்டாயம்.. ஆன்லைன் மூலம் சுலபமாக முடிச்சிடலாம்!




பிஎம் கிசான் 20வது தவணை – வெளியான சூப்பர் தகவல்
விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக பிஎம் கிசான் 20வது தவணை உள்ள நிலையில், அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜூலை 18, 2025 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் பிஎம் கிசான் 20வது தவணை பணத்தை வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, இந்த ஆண்டு புதியதாக சுமார் 2.5 லட்சம் கிசான் அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்களுக்கு பிஎம் கிசான் பணம் இன்னும் வரவில்லையா?
உங்களுக்கு இன்னும் பிஎம் கிசான் 20வது தவணை பணம் வரவில்லை என்றால் நீங்கள் இ கேஒய்சி (e KYC – Know Your Customer) செய்யாமல் இருப்பீர்கள். பிஎம் கிசான் 20வது தவணை பணம் பெறுவதற்கு இ கேஒய்சி கட்டாயம். எனவே, ஆன்லைன் மூலம் மிக விரைவாக கேஒய்சி செய்து முடிப்பதன் மூலம் உங்களுக்கு பிஎம் கிசான் 20வது தவணை பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.