Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

7வது நாளாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. என்ன காரணம்?

Sanitization Workers Protest: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கடந்த 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டு ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7வது நாளாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. என்ன காரணம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2025 16:09 PM

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி அலுவலகரமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஏழு நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பணிகளில் தூய்மை பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கூறிய ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள் மற்றும் என்.யு.எல்.எம் திட்டத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் என இருதரப்பினரும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஐந்து மண்டலங்களில் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்களை அனைவரையும் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் பாதிக்கும், வேலை ஊதியம் குறையும் என பல்வேறு குறைகளை முன் வைத்து வருகின்றனர். இதனால் தனியார் மையமாக கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்:

மேலும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கடந்த 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் தனியாரை அனுமதிக்க கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதிகளில் குப்பைகள் அல்லாமல் சாலை எங்கும் குப்பைகளால் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

குப்பைகளால் கடுமையான துர்நாற்றம்:

குப்பைகள் அல்லாமல் இருக்கும் காரணத்தால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலரும் தங்களது முகங்களை மூடியவாறு செல்கின்றனர். இந்த நிலையில் உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் சமூகநிலை எட்டாத காரணத்தால் தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்ல போக முடியாது!

ஆதரவு தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள்:


இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ குப்பைகளால் வீசும் துர்நாற்றம் கோட்டைக்கு வந்தடையவில்லை முதல்வரே என கேள்வி எழுப்பியுள்ளார். பெருகிவரும் குப்பைகளால் வரப்போகும் ஆபத்தை அறியாமல் தங்கள் வீடு, இடம், அலுவலகம் ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என போராட்டக்காரர்களையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒரு சேர அலட்சியப்படுத்தும் திமுக அரசு மக்களிடமிருந்து இன்னும் எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் திருந்தப் போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: 50% தள்ளுபடி.. இனி ஊபர் செயலியில் மெட்ரோ டிக்கெட்.. ஈஸியா புக் பண்ணலாம்!

500 பாட்டில் தண்ணீருடன் வந்த பாடகி சின்மயி:

இந்நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தண்ணீர் தேவை என தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 500 பாட்டில் தண்ணீருடன் பாடகி சின்மயி ரிப்பன் மாளிகைக்கு வருகை தந்து போராட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தார்.