Chennai Sanitation Workers Strike: தூய்மை பணியாளர்கள் குரல் முதல்வருக்கு கேட்கவில்லையா..? நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nainar Nagendran about Workers Strike: சென்னை மாநகராட்சியின் கழிவு மேலாண்மை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஐந்து நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை குப்பைகளால் நிறைந்துள்ளது. தனியார்மயமாக்க திட்டத்திற்கு ரூ.2363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிரந்தர வேலைவாய்ப்பு கோரி பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

சென்னை, ஆகஸ்ட் 7: சென்னை மாநகராட்சியின் (Chennai Greater Corporation) கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து சுமார் 300க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த 5 நாட்களுக்கு மேலாக முகாம் அமைத்து வேலைநிறுத்தத்தின் (Chennai sanitation strike) ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை முழுவதும் நாளுக்கு குப்பைகள் குவிந்து வருகின்றனர். முன்னதாக, சென்னை மாநகராட்சி சமீபத்தில், கழிவுகளை சேகரித்து கொண்டு (Waste management privatization) செல்லும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, 10 ஆண்டுகளுக்கு ரூ.2,363 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்தது. இது தூய்மை பணியார்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சியின் கீழ் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரன் கேள்வி:
குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா முதல்வரே?
சென்னையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மலையாகக் குவிந்து கிடக்கும் குப்பைகளைத் தாண்டி குதித்துச்… pic.twitter.com/ErdBcgqi0B
— Nainar Nagenthiran (@NainarBJP) August 6, 2025
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் சென்னை மாநாகர கட்டிடத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னை தலைநகரமே குப்பை கூளத்தால் நிரம்பி கிடக்கிறது. காலையில் பள்ளிக்கு செல்லும் பள்ளி குழந்தைகள் மலையாக குவிந்து கிடக்கும் குப்பைகளை தாண்டி குதித்து செல்கின்றனர்.




ALSO READ: அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..
அதேபோல் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கை மூடி கடந்து செல்கின்றனர். அதன்படி, சென்னையில் எங்கு எப்போது என்ன பெருந்தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆனால், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஆளும் அரசை சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ, முதலமைச்சரோ போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு இதுநாள் வரை காது கொடுத்து கேட்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை நேரில் சென்று சந்தித்து சமாதானம் செய்ய முயற்சிக்கவும் இல்லை.
சென்னையில் பெருகிவரும் குப்பைகளால் வரப்போகும் ஆபத்தை பொருட்படுத்தாமல் தங்கள் வீடு, இடம், அலுவலகம் ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், போராட்டக்காரர்களையும் ஒருசேர அலட்சியப்படுத்தும் திராவிட முன்னேற்ற கழக அரசு, மக்களிடம் இருந்து இன்னும் எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் திருந்த போவது கிடையாது! அடுத்த முறை அரியணை ஏறும் வாய்ப்பும் திமுகவிற்கு கிடைக்கப் போவதில்லை!” என பதிவிட்டிருந்தார்.
ALSO READ: 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
தனியார்மயமாதல்:
கடந்த 2025 ஜூலை 16ம் தேதி சென்னை மாநகராட்சி அம்பத்தூர், திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் கழிவு மேலாண்மையை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 10 ஆண்டுகளுக்கு ரூ. 2363 கோடி செலவில், இந்த திட்டத்தில் வீடு வீடாக பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரித்தல், தெரு மற்றும் நடைபாதை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும். திடக்கழிவு சேகரிப்பு ராம்கி குழுமத்தின் டெல்லி எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அவர்கள் இன்னும் பணியை தொடங்கவில்லை.