Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று, (ஆகஸ்ட் 7, 2025) கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2025 06:31 AM

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 7, 2025: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுத்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 7, 2025 தேதியான இன்று கோவை, நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 8 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் பதிவான 12 செ.மீ மழை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக கோவை நீலகிரி தென்காசி தேனே திருப்பத்தூர் கூலியிடம் மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) 12, சிங்கம்புணரி (சிவகங்கை) 10, திருப்புவனம் (சிவகங்கை), கொடுமுடி (ஈரோடு) தலா 8, இடையப்பட்டி (மதுரை) 7, மின்னல் (ராணிப்பேட்டை), பூதலூர் (தஞ்சாவூர்) தலா 6, ஆற்காடு (ராணிப்பேட்டை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), பார்வூட் (நீலகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடரும் மழை:

இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 9 2025-ம் தேதி விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உத்தரகண்ட் வெள்ளத்தில் மிஸ்ஸான 28 மலையாளிகள்.. நிலைமை என்ன..?

மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது