Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பழம்பெரும் நடிகை எம்.என் ராஜத்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

CM MK Stalin Meets Actress M.N. Rajam: பழம்பெரும் நடிகையான எம்.என் ராஜம் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார், அப்போது தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார், இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பழம்பெரும் நடிகை எம்.என் ராஜத்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..
எம்.என் ராஜத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2025 06:51 AM

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: 90 வயதான பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகையாக இருந்தவர் எம்.என் ராஜம். இவர் பல திரைப்படங்களில் குறிப்பாக 1950 முதல் 19 60 வரை முன்னணி நடிகையாக இருந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் வரக்கூடிய அழகான பொண்ணுதான் என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது.

முதலமைச்சரை சந்திக்க விருப்பம் தெரிவித்த எம்.என். ராஜம்:

அதேபோல் எம் என் ராஜம் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் அடையாறில் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 5, 2025 தேதி அன்று எம் என் ராஜத்தின் 90 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது குடும்பத்தினர் அதாவது மகன், மகள், பேரன், பேத்தி உட்பட பலருடன் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின் பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தான் சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

எம்.என். ராஜத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்:

இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் நேற்று அதாவது ஆகஸ்ட் 6, 2025 அன்று அடையாறில் இருக்கக்கூடிய எம் என் ராஜத்தின் இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது அவரது உடல்நிலை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டு அறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்:


இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் முதலமைச்சர் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பேசினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.