Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்!

Chennai Traffic Diversion : சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலை ஆக மாற்றப்பட்டு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Umabarkavi K
Umabarkavi K | Published: 12 Aug 2025 06:08 AM

சென்னை, ஆகஸ்ட் 12 : சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் (Alwarpet Flyover) போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Changes) செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் காரணமாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். அதிலும் தற்போது, மெட்ரோ பணிகள், மேம்பால பணிகள், சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகள் என ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பணிகளின்போது, அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஆழ்வார்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் டிடிகே சாலையில் ஆழ்வார்பேட்டை சிக்னல் மூதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாலை வரை 230 மீட்டர் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலை ஆக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read : சென்னை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் மின்சார ரயில்கள் ரத்து.. எங்கு?

சென்னையில் முக்கிய ரூட்டில் போக்குவரத்து மாற்றம்

எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. TTK சாலை (Incoming)-ல் மியூசிக் அகடாமி நோக்கி வரும் MTC பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

Also Read : சென்ட்ரல் டூ அரக்கோணம்.. வருகிறது ஏசி மின்சார ரயில் சேவை.. எப்போது முதல் தெரியுமா?

TTK சாலை (Incoming)-ல் மயிலாப்பூர் நோக்கி வரும் மாநகர பேருந்துகள். கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி. எஸ் சிவசாமி சாலை வழியாக சென்று வழக்கம்போல் தங்கள் இலக்கை அடையலாம். TTK சாலை (Outgoing)-ல் ஆழ்வார்பேட்டை நோக்கி மாநகர பேருந்துகள் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.