Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விழுப்புரம்: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனையில் அலட்சியம்

Wrong Surgery Details: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது காலில் வீக்கம் இருந்த பஸ்கண்டக்டர் மாரிமுத்துவுக்கு தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனை டாக்டர்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர். வலது காலின் அறுவை சிகிச்சை வரும் திங்கட்கிழமை செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அரசு மருத்துவமனை அலட்சியத்தை வெளிச்சமிட்டது.

விழுப்புரம்: வலது காலுக்கு பதில் இடது காலில் அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனையில் அலட்சியம்
விழுப்புரம் அரசு மருத்துவமனைImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 05 Jul 2025 08:50 AM

விழுப்புரம் ஜூலை 05: விழுப்புரம் (Vilupuram) மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து (Marimuthu), தனியார் பஸ்சில் கண்டக்டராக (conductor in a private bus) பணியாற்றுகிறார். வலது காலில் வீக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு (Villupuram Government Hospital) சென்றார். ஆனால் தவறுதலால் இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்து, குடும்பத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் பதற்றம் நிலவ, போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளனர். சிகிச்சை தவறுக்கு வருந்திய டாக்டர்கள், வலது காலில் வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக கூறினர். ஆனால் மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதனை ஏற்காமல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கால் வலியால் பாதிக்கப்பட்டு வந்த நடத்துனர்

விழுப்புரம் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (46), விழுப்புரம்–புதுச்சேரி சாலையில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக அவரது வலது காலை வீக்கத்தால் வேதனையில் இருந்ததால், 2025 ஜூன் 30ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அதில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில், வலது காலில் ஜவ்வு கிழிந்து இருப்பதால் அறுவை சிகிச்சை அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

வலது காலை அல்லாமல் இடது காலில் அறுவை சிகிச்சை

இதற்கமைய, 2025 ஜூலை 4ம் தேதி காலை 8 மணியளவில் மாரிமுத்துவை அறுவை சிகிச்சைக்கு எடுத்துச் சென்ற டாக்டர்கள், மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை முடித்த பின்னர் 12.45 மணிக்கு அவரை வார்டுக்கு மீண்டும் அழைத்துச்சென்றனர். ஆனால் மயக்கம் தெளிந்ததும், மாரிமுத்து வலது காலை அல்லாமல் இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

தவறை ஒப்புக்கொண்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

இது குறித்து டாக்டர்களிடம் வினவியபோது, அவர்கள் திகைத்து தவறை ஒப்புக்கொண்டனர். சிகிச்சை தவறுக்கு வருந்திய டாக்டர்கள், வலது காலில் வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக கூறினர். ஆனால் மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதனை ஏற்காமல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்த போலீசார்

இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் தற்சமயம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று இருபுறத்தவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், மருத்துவமனைக்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தவறான சிகிச்சையால் ஒரு எளிய பஸ்கண்டக்டர் உயிரின் முக்கிய அங்கமான காலை இழக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ள சம்பவம், அரசு மருத்துவமனைகளில் உள்ள அலட்சிய மனப்பாங்கு குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.