Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிகாலையில் வந்த 3 நபர்கள்.. வீட்டில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை!

Karur Crime News: கரூர் மாவட்டம், குளித்தலையில் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி முதல்வர் கருணாநிதி வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்றனர்.

அதிகாலையில் வந்த 3 நபர்கள்.. வீட்டில் இருந்த 40 சவரன் நகை கொள்ளை!
திருட்டு சம்பவம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Aug 2025 07:22 AM

கரூர், ஆகஸ்ட் 19: கரூர் மாவட்டத்தில் ஓய்வுப்பெற்ற அரசு கல்லூரி முதல்வர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த 3 பேரையும் மர்ம நபர்கள் கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவமானது 2025, ஆகஸ்ட் 18ம் தேதி அதிகாலை நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்த கருணாநிதி என்பவர் திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரியும் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர்கள் தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்கள்.

அதிகாலையில் வந்த 3 நபர்கள்

இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கும் நிலையில் மகன் சேலத்தில் வசித்து வருகிறார். அதேபோல் மூத்த மகள் ரம்யா திருமணமாகி அருகிலுள்ள வை.புதூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இளைய மகள் அபர்ணா பல் மருத்துவராக உள்ளார். கடந்த சில மாதங்களாக இவர்கள் வீட்டை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை தரைதளத்தில் கருணாநிதியும் சாவித்திரியும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

Also Read: 80 வயது முதியவருக்கு பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. ரூ.9 கோடி அபேஸ்!

மேல் தளத்தில் அபர்ணா இருந்த நிலையில் 3 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர் சத்தம் கேட்டு வெளியே வந்த மூன்று பேரையும் கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் ஆயுதங்களால் தாக்கிய அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 7 லட்சம் பணம், 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கருணாநிதி காவல் துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த குளித்தலை போலீசார் வீட்டை சோதனை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த கருணாநிதி, சாவித்திரி மற்றும் அபர்ணா ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Also Read: தலைக்கேறிய போதை.. திருட சென்ற வீட்டில் படுத்து தூங்கிய நபர்.. கையும், களவுமாக சிக்கினார்!

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கரூர் எஸ் பி ஜோஸ் தங்கையா மற்றும் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் வருகை தந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து போலீசார் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கருணாநிதி வீட்டிலிருந்து திருடி செல்லப்பட்ட மூன்று செல்போன்களில் ஒரு போன் குளித்தலை – மணப்பாறை  தேசிய நெடுஞ்சாலையில் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .