யூடியூப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு.. ரூ.2.5 லட்சம் இழந்த பெண்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
Chennai Crime News : சென்னை பல்லவரத்தை சேர்ந்த பெண் பங்குச்சந்தையில் அதிக பணத்தை முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்காக ஆன்லைன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாததால், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 17 : சென்னை பல்லவாரத்தில் நிதி நெருக்கடியால் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்து, கடனில் பெண் சிக்கினார். இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் லாபம் வரும் என்பதற்காக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். ஒருமுறை லாபம் பார்த்ததும், பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்து பணத்தை இழந்தும் வருகின்றனர். இதனால், பலரும் கடனில் சிக்கி விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான், சென்னையில் அரங்கேறி உள்ளது. அதாவது, சென்னையில் யூடியூப் பார்த்து பங்குச்சந்தையில் முதலீடு செய்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யூடியூப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு
அதாவது, சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (44). இவரது மனைவி வனஜா (38). இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியாக அருண், பெண்டிங் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவரது வனஜா வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில், வனஜா சில நாட்களாகவே, பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து, அதில் இரட்டிப்பு மடங்கு லாபர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிக பணம் முதலீடு செய்தார், அதிக லாபம் கிடைக்கும் என வனஜா நினைத்தார்.




அதனால், பங்குச்சந்தையில் அதிக பணத்தை முதலீடு செய்தார். தனது கணவருக்கு தெரியாமல், ஆன்லைன் கடன் செயலியில் ரூ.2.5 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். அதனை, பங்குச்சந்தையில் முதலீடு செய்த வனஜாவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த மொத்த பணத்தை அவர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : ஒருதலைக் காதலால் விபரீதம்.. 9ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!
பெண் எடுத்த விபரீத முடிவு
இதனால், வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும், கடனை கேட்டு வங்கி ஊழியர்கள் அவருக்கு தொடர்ந்து போன் செய்தும் வந்துள்ளனர். இதனால் வனஜா மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, வனஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர், வனஜா தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
Also Read : சொத்தில் பங்கு தராததால் ஆத்திரம்.. மாமனாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகன்!
அதில், வனஜா தனது கணவருக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். தனியார் வங்கியில் வாங்கி கடனை செலுத்த முடியாததால் நெருக்கடியில் இருந்ததாகவும், என்னை மன்னித்து விடுங்கள் எனவும் தெரிவித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)