Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விமானத்தில் பயணம் செய்யும்போது Flight Mode போடவில்லை என்றால் என்ன ஆகும்?

Airplane Mode Mandate | விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்களது மொபைல் போன்களை பிளைட் மோடில் போட வேண்டும் என்று விமான குழு அறிவுறுத்தும். இந்த விதி மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் நிலையில், அது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமானத்தில் பயணம் செய்யும்போது Flight Mode போடவில்லை என்றால் என்ன ஆகும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Aug 2025 22:58 PM

விமானத்தில் பயணம் செய்யும்போது மொபைல் போனை (Mobile Phone) பிளைட் மோடில் (Flight Mode) போட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதற்காக ஸ்மார்ட்போன்களில் (Smartphone) தனி அம்சமும் கூட உள்ளது. ஆனால், விமானத்தில் பயணம் செய்யும்போது ஏன் மொபைல் போனை பிளைட் மோடில் போட வேண்டும், அவ்வாறு விமானத்தில் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்போனை பிளைட் மோடில் போடவில்லை என்றால் என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விமானத்தில் பயணம் செய்ய மொபைல் போனை பிளைட் மோடில் போடுவது கட்டாயம்

நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது, விமானத்தில் ஏறிய உடன் அன்புக்குறியவர்களுக்கு போன் செய்துவிட்டு அடுத்த வேலையாக மொபைல் போனை பிளைட் மோடில் போட வேண்டும். நீங்கள் பிளைட் மோடில் போடவில்லை என்றாலும், விமான குழு உங்களுக்கு மொபைல் போனை பிளைட் மோடில் போட வேண்டும் என அறிவுரை வழங்கும். எனவே எவ்வாறாயினும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் மொபைல் போனை பிளைட் மோடில் போட வேண்டும்.

இதையும் படிங்க : கூகுள் லொகேஷனை வைத்து காப்பீடு கோரிக்கையை நிராகரிக்க முடியுமா? உண்மை என்ன?

மொபைல் போனை ஏன் பிளைட் மோடில் போடவேண்டும்?

மொபைல் போனை பிளைட் மோடில் போட்டால் அது சில சேவைகளை முற்றிலுமாக துண்டித்துவிடும். அதாவது போன் கால்கள், குறுஞ்செய்தி, மொபைல் டேட்டா, வை ஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய அம்சங்கள் செயல்படாமல் போய்விடும். உங்கள் மொபைல் போனை சிக்னலில் இருந்து துண்டிப்பதற்காக இது செய்யப்படுகிறது. காரணம், மொபைல் போன்களின் சிங்கனல் விமானத்தின் சிஸ்டத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விமானத்திற்கு வரவேண்டிய சிக்னல் கிடைக்காமல் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே தான் விமானம் புறப்படுவதற்கு முன்னதாக பயணிகள் தங்களது மொபைல் போன்களை பிளைட் மோடில் போட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

பிளைட் மோட் போடுவதற்கான முக்கிய காரணம்

விமானம் பறக்கும்போது பயணிகளை தங்களது மொபைல் போன்களை பிளைட் மோடி போட சொல்வதற்கு எலக்ட்ரோ மேக்னடிக் இன்டர்பெரென்ஸ் (Electro Magnetic Interference),  விமானத்தின் நேவிகேஷன் அம்சத்தை (Navigation System) பாதிக்காமல் இருக்க கட்டாயமாக உள்ளது. ஒருவேளை பயணிகளின் மொபைல் போன்கள் பிளைட் மோடில் இல்லை என்றால் அது தொடர்ந்து சிக்னலை தேடிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக விமானம் பறப்பத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.